உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோளிங்கரில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பிரதிஷ்டை செய்த பெருமாள் சிலை: அனுமதியின்றி வைத்ததால் அகற்றம்

சோளிங்கரில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பிரதிஷ்டை செய்த பெருமாள் சிலை: அனுமதியின்றி வைத்ததால் அகற்றம்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கொண்டாபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.கோவில் மலையடிவாரத்தில் பிரம்ம தீர்த்தம் எனப்படும், தக்கான் குளம் உள்ளது. இந்த குளக்கரையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென, 16 அடி உயரத்தில் பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.சிலையின் கீழ் உள்ள பீடம், 5 அடி அகலம், 3 அடி உயரத்திலான கிரானைட் கல்லால் ஆனது. இந்த பீடத்தில் பெருமாள் சிலை கச்சிதமாக பொருந்தும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது. இவை யாவும் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து அதிகாலைக்குள் நிறுவப்பட்டு இருந்தது.திடீரென பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பெருமாள் சிலையை, நேற்று அதிகாலை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த செய்தி சோளிங்கர் சுற்றுவட்டார பகுதியில் பரவியது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்ய குவிந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, ஹிந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் ஜெயா, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி, இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்டோர், இதுகுறித்து விசாரணை நடத்தினர். நிலைமையை அறிந்து நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற, அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். சிலையை அகற்றக்கூடாது என, சோளிங்கர் நகர பா.ஜ., தலைவர் சேகர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, கிரேன் வாயிலாக, பெருமாள் சிலையை பீடத்தில் இருந்து அகற்றினர். அகற்றப்பட்ட சிலையை ரோப்கார் வளாகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அடையாளம் தெரியாத நபர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் சிலை, நேற்று மாலையே அங்கிருந்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ramesh Sargam
ஜன 14, 2025 22:47

இதே ஒரு பெரியார் சிலையையோ, கருணாநிதி சிலையையோ வைத்து பின் அகற்றி இருந்தால் ஒரு பெரிய கலவரமே வெடித்திருக்கும்.


Ramesh Sargam
ஜன 14, 2025 22:46

அகிலங்களை காக்கும் பெருமாளுக்கும் சோதனையா..?


shanmugam subramanian
ஜன 14, 2025 13:42

இறைவனையே இரவில் படைக்கும் இனமாகிவிட்டதே மனித இனம் இந்த இழிநிலைக்கு காரணம் என்னவென்று சிந்தித்தல் சாலச்சிறந்தது. தன் நம்பிக்கை சீரழிந்த நிலையில் யாரையாவது நம்பியாக வேண்டிய நிலையில் இருக்கிறது. இயற்கையா? இறைவனா? என்று வரும்போது இயற்கையை சீரழித்து இறையை நாடுதல்? முன்னோர் யாவரும் அன்பு, கருணை கொள்ளச் சொன்னார்கள் யாவை மற்றும் யாவரிடத்தும் இவைகளை மறந்து நல் வாழ்வு வாழ நினைக்கிறோம். அவர்களை வாசிக்க, நேசிக்க தவறியதின் விளைவே இவை. தன்னை முன்னிறுத்தவே முனைகிறான் எவ்விடத்திலும். ஆகவே இது போன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் அதிகரிக்கவே செய்யும். அரசின் கடமை இதுபோன்ற செயல்களை முன்பே கண்டறிந்து அவைகளை ஆராய்ந்து வரைமுறைப்படுத்த வேண்டும். அதை விடுத்து மக்களின் உணர்ச்சியை துண்டும் விதமாகவும், அதற்காக போராட வேண்டிய வாய்ப்புகளை வழங்கக்கூடாது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்


ஆரூர் ரங்
ஜன 13, 2025 19:31

முன்பு திமுக ஆட்சியில் சென்னையில் திடீரென பிள்ளையார் சிலை தோன்றியது . அதற்காக ஒரு போலீஸ் காவலர் கைது செய்யப்பட்டார்.


M Selvaraaj Prabu
ஜன 13, 2025 11:13

நிறைய மசூதிகள் இப்படி கட்டப்பட்டவையே. நான் சிறிய வயதாக இருக்கும் போது காரமடையில் ரோட்டோரமாக இறந்த ஒருவரை புதைத்துவிட்டு, சுமார் 50 சென்ட் இடத்தை இப்படித்தான் எடுத்து மசூதி கட்டினார்கள். இது வரையில் அந்த இடத்தை அரசாங்கத்தால் திரும்ப பெற முடிய வில்லை.


Kanns
ஜன 13, 2025 09:41

Sack & Punish Anti Native People Hindu Majority Ruling Party & Stooge Officials


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 09:25

அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிக்க இது ஒரு தந்திரம். ஏன் சட்ட பூர்வ அனுமதி கேட்டால் தர மாட்டார்களா? தமிழ் நாட்டில் எப்படியாவது ஒரு மதக்கலவரம் உருவாக்க நினைக்கும் தீய சதிகளின் சதித்திட்டம் ஒரு போதும் நடக்காது. இது படித்தவர்கள் அதிகம் உள்ள தமிழ் நாடு.


R K Raman
ஜன 13, 2025 12:16

ராணுவத்தின் இடத்தில் உள்ள மசூதியை அகற்ற முயன்றாலும் நடக்கவில்லை... அது பற்றி ஏதாவது கருத்து உள்ளதா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 13, 2025 21:06

இதே இடத்தில் ஒரு சிலுவையையோ அல்லது மேரி சிலையையோ அல்லது இயேசு பிரான் சிலையையோ நிறுவி இருந்தால் இந்நேரம் அகற்றி இருப்பார்களா? நிச்சயமாக அதற்கு பாதுகாப்பு போட்டு இருப்பார்கள்


VENKATASUBRAMANIAN
ஜன 13, 2025 08:55

ஆமாம் திமுக இந்து விரோத கட்சி. ஏன் ஓட்டு போடுகிறீர்கள். முதலில் அதை நிறுத்துங்கள். காசு கொடுத்தால் வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள். அது உங்களிடம் கொள்ளை அடித்த பணம்.


தமிழ்வேள்
ஜன 13, 2025 08:46

அனுமதியற்ற மசூதியை சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டும் கூட அகற்றாத திராவிடிய ஆப்ரஹாமிய அடிமை அரசு ஹிந்துக்களை மட்டுமே முழு மூச்சாக ஒடுக்குகிறது... மலைகள் முழுவதும் சிலுவைகள்..அனுமதி பெற்றவையா?


venkatrangan
ஜன 13, 2025 08:43

அகற்ற வேண்டிய அவசியம் இல்லை, கோவிலில் வைக்கப்பட்ட செய்தானே அதை எப்படி முறைப்படுத்த வேண்டுமோ அதன்படி முறைப்படுத்தி சரி செய்திருக்கலாம். இதுதான் திராவிட மாடல் அரசு இந்துக்கள் மீதும் மற்ற மதத்தினர் மீதும் உள்ள எவ்வாறு அக்கறை காட்டுகிறது என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


சமீபத்திய செய்தி