உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புதிதாக கூட்டணி உருவாக்கும் கட்சி எங்களுடன் பேசுகிறது

 புதிதாக கூட்டணி உருவாக்கும் கட்சி எங்களுடன் பேசுகிறது

நான் துாண்டிவிட்டு தான் த.வெ.க.,வில் செங்கோட்டையன் சேர்ந்ததாக சொல்கின்றனர்; பன்னீர்செல்வம் எந்த முடிவெடுத்தாலும் நான் துாண்டிவிடுவதாக கூறுகின்றனர். தினகரன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்கின்றனர். ஒரு கூட்டணிக்கு செல்வதென்றால், எத்தனை தொகுதிகள் என்று பேசிய பின்தான் செல்ல முடியும். தற்போது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளும், புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சியும், தங்கள் கூட்டணிக்கு வருமாறு எங்களிடம் பேசுவது உண்மை. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அலைபேசியிலும், நேரிலும் தே.ஜ., கூட்டணிக்கு வருமாறு வலியுறுத்துகிறார். டில்லி சென்று வந்தாலோ, தலைவர்களை சந்தித்தாலோ, அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களில் பேசி, அவர்களின் விருப்பத்தை எங்களிடம் திணிக்கின்றனர். எந்த அழுத்தமும் எனக்கு இல்லை; யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை. -- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ