மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தமிழ்கத்தில் உள்ளது
தமிழகத்தில் இதுவரை கேள்விபடாத அளவு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை அவரவர் கையில் எடுத்துள்ளனர். கட்டுப்படுத்த வேண்டியவர் கையில் எதுவும் இல்லை.ஆட்சியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே உண்மை. ஆனால், தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகிவிட்டது. தமிழகம் முழுவதும் அதிகளவு கல்குவாரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே அச்சுறுத்தலை உருவாக்கிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சமநிலையற்ற நிலை நிலவுகிறது.இந்த ஆட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இன்னும் ஓராண்டு எப்படி போகுமோ என்ற நிலை தான் உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கான, 18 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு எந்த விதத்திலும் சிதைக்கக்கூடாது.கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்