உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடிகளுக்கு போலீசே காரணம்!

மோசடிகளுக்கு போலீசே காரணம்!

நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத் தர, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி நிறுவனங்கள் காளான்களை போல உருவெடுத்து, மக்களை ஏமாற்றுவதற்கு, 90 சதவீதம் காவல் துறையின் அலட்சியமே காரணம். பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களின் மோசடிகள், காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. எனவே, நடந்த இந்த மோசடிகளுக்கு காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும்.மக்கள் உழைத்து சேர்த்த பணத்தை, அவர்களுக்கு திரும்பப் பெற்றுத் தர வேண்டியது, தமிழக அரசின் கடமை. இதற்காக, டி.ஜி.பி., நிலையிலான காவல் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ