உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே சொந்தம்: முதல்வர் ஸ்டாலின்

சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே சொந்தம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கே சொந்தம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கே சொந்தம். தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக கவர்னர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் அவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழக சட்டசபை நிராகரித்தது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதற்கிடையே முன்னதாக, இன்று காலை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'கவர்னர் ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார். கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது. சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம். சித்த மருத்துவ முன்வடிவு நிதிச்சட்ட முன்வடிவு என்பதால் கவர்னரின் பரிந்துரையை பெற வேண்டும்.அரசமைப்பு நடைமுறைபடி செயல்படாத கவர்னர் சட்ட முன்வடிவில் சில கருத்துகளை கூறியுள்ளார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Keshavan.J
அக் 17, 2025 19:38

ஹலோ ஓசி அரிசி, இதை போயி உன் போப்பு கிட்ட சொல்லு.


Rajasekar Jayaraman
அக் 17, 2025 14:41

சரி தனி சட்டம் இயற்ற முடியுமா பார்ப்போம்.


Benugopal, S
அக் 17, 2025 08:34

உருப்படியாக ஒண்ணும் பண்ணவில்லை. நாலரை வருடம் போனாலும் ஒவ்வொரு தமிழன் மீதும் 15 லட்சம் கடன்.


பிரேம்ஜி
அக் 17, 2025 07:17

எப்போதும் தமிழர்கள் பட்டம் கொடுப்பதில் வல்லவர்கள்! மக்கள் திலகம்.. நடிகர் திலகம்.. நடிகையர் திலகம்.... அப்புறம் .........!


சிட்டுக்குருவி
அக் 17, 2025 00:16

"நிதிச்சட்ட முன்வடிவு என்பதால் கவர்னரின் பரிந்துரையை பெற வேண்டும்." நீங்கள் சொல்வதைதானே கவர்னர் செய்திருக்கின்றார் .உங்களுக்கு "பரிந்துறை என்பதற்கு அர்த்தம் தெரியவில்லையா அல்லது தற்போதுள்ள குழப்பங்களுக்கு புதிதாக மக்களை திசைதிருப்ப வழிதேடுகிண்றீர்களா ?


Ramesh Sargam
அக் 16, 2025 23:24

ஆனால் அதை மீறும் அதிகாரம் திமுகவினருக்கு மட்டும் சொந்தம். நாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.


J. Vensuslaus
அக் 16, 2025 23:10

அரசியல் சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை கவர்னர் மூலம் பறிக்க முயல்கிறது ஒன்றிய அரசு. கவர்னர் ஒரு கருவி. அதை இயக்குவது ஒன்றியம் தான். ஒன்றியம் சொல்வதுபடி கவர்னர் செய்யாவிட்டால் பதவியை பறித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அரசியல் அமைப்புப்படி ஒன்றிய அரசால் இயங்க முடியா விட்டால் பதவி விலகலாம்.


நிக்கோல்தாம்சன்
அக் 16, 2025 22:27

எப்போது சட்டசபைக்கு சொந்தம் என்ற கேள்விக்கு ? மக்கள் தங்கள் வோட்டினை திரும்ப கேட்டு பெற்று , அவர்கள் வெற்றி பெறவைத்த MLA/MP போன்றோர் மக்களுக்காக உண்மையாக சேவகம் செய்கையில் சட்டசபைக்கே சொந்தம் என்று கூறலாம் , ஒருமுறை வோட்டு வாங்கிவிட்டால் அடுத்த ஐந்தாண்டு என்ன அசிங்கமா நடந்துகொண்டால் கேட்க நாதி இல்லை என்ற நிலையில் எப்படி கடிவாளம் இல்லாமல் சட்டம் இயற்றலாம் ? ஸ்டாலின் சார் உங்களுக்கு இந்த கேள்வி புரிய வாய்ப்பில்லை , வில்சன் ஸாரிடமோ , PTR அவர்களிடமோ கேட்டு தெரிந்து பதில் கொடுங்க


KOVAIKARAN
அக் 16, 2025 22:08

இந்தமாதிரி வில்லங்கமான சட்டங்களை ஒரு காலத்தில் வந்து தமிழகத்தை சீரழிக்கும் என்று எதிர்நோக்கித்தான் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்கும் பொது, ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்தார்கள். பிரதம மந்திரியின் ஆலோசனைகளின் படி, ஜனாதிபதி கவர்னர்களை நியமனம் செய்கிறார். எனவே கவர்னர் என்பவர் மாநில மக்களின் இறையாண்மையைக்காக்கும் காவலர் என்றும் கூறலாம்.


c.mohanraj raj
அக் 16, 2025 21:40

மூளை உள்ளவன் சட்டம் இயற்றினால் நன்றாக இருக்கும் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை