உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் 5ல் சென்னை வருகிறார் பிரதமர்

மார்ச் 5ல் சென்னை வருகிறார் பிரதமர்

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகிறார். அங்கு நடக்கும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அன்றிரவு அவர் மதுரையில் தங்குகிறார். அடுத்த நாள் துாத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி, குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மதியம், திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.இந்நிலையில் பிரதமர் மோடி, மார்ச் 5ல் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரயில் சேவை உட்பட, பல திட்டங்களை துவக்கி வைக்கிறார். பின், தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகளுடன், தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை