உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமரன் படத்துக்கு எதிரான போராட்டம் சதி செயலுக்கான முன்னோட்டம்

அமரன் படத்துக்கு எதிரான போராட்டம் சதி செயலுக்கான முன்னோட்டம்

திருப்பூர்: 'அமரன்' திரைப்படத்துக்கு எதிராக நடக்கும் போராட்டம், சதிசெயலுக்கான முன்னோட்டம்' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து, அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

சமீபத்தில் வெளிவந்த 'அமரன்' திரைப்படம், ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது. அப்படத்தை பார்த்த, ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும் தேசபக்தி உணர்வை ஏற்படுத்துகிறது. தன்னலமற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமிக்க தியாக வாழ்க்கையை பார்த்து, கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை.அவ்வகையில், ஏராளமான ஆன்மிக மற்றும் தேசபக்தி படங்கள் வெளிவந்து கொண்டிருந்த, தமிழக திரைத்துறையில், பத்தாண்டுகளாக தொடர்ந்து இன, மொழி, பிராந்திய, வெறுப்பு படங்கள் மற்றும் பிரிவினைவாதத்தை முன்னிறுத்தும் தேச விரோத படங்கள் அதிகம் வெளிவரத் துவங்கி விட்டன. இதுபோன்ற சூழலில், நம் நாட்டு ராணுவ வீரர்களின் தியாகத்தையும், தேச பக்தியையும் எடுத்துகாட்டும் வகையில் 'அமரன்' படம் வெளியாகியுள்ளது. அதே நேரம், தமிழகத்தில் சில இடங்களில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னிறுத்தும் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், 'அமரன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அந்நிகழ்வில் கலந்து கொண்டாரில் சிலர், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். கூடவே, காஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதிகளை போராளிகள், தியாகிகள் என்ற கருத்து திரிப்பையும் வாசித்துள்ளனர்.இதெல்லாம் பிரிவினைவாதத்தை ஊட்டும் திட்டமிட்ட சதிசெயல்கள் என்பதை தமிழக போலீஸ் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாக்க இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும், பிரிவினைவாத அமைப்புகளும், அமரன் படத்தை வைத்து, தீவிரமான சதி செயலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து, துவக்கத்திலேயே ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sridhar
நவ 10, 2024 13:16

ஜின்னா அன்று சொன்னதை தான் இவர்கள் இன்று நிரூபிக்கிறார்கள். இந்திய ராணுவமா தீவிரவாதிகளா எனும் விஷயத்தில் இவர்கள் யார்பக்கம் நிற்கிறார்கள் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இவர்களிடம் நாட்டு பற்றை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்தியாவில் இருந்துகொண்டே இவ்வளவு வெளிப்படையாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எங்களால் குரல் கொடுக்க முடியும் என்று காண்பித்திருக்கிறார்கள் . இவர்களுக்கு குடியுரிமை கொடுத்து இங்கேயே இருந்துகொள்ளலாம் என்று சொன்னவர்கள் யார்? பிரிவினையின்போது அவரவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்றிருந்தால் இந்த பிரச்சனை யாருக்கும் வந்திருக்காதல்லவா? இப்போதும் வலிமையான இந்திய அரசு போஸ் போன்ற ஒரு தலைமையில் இருந்திருந்தால், நடக்கலாம். இந்தியா வலிமை பெறுமா?


Sampath Kumar
நவ 10, 2024 10:51

இந்த காஸ்மீர் பிரச்னை ஓயப்போவது இல்லை ஆங்கிலேர்கள் தெரிந்து தான் இதை அப்படியே விட்டு விட்டு அடித்து கொண்டு சாவுங்கடா என்று விட்டு விட்டார்கள் தேச பக்தன் போணுவத்தில் நியம இல்லை றவனுவம் சம்பந்த பட்ட படம் என்றால் முஸ்லீம் தீவிரவியாதிகள் பற்றி மட்டுமே ஏடுப்பது என்பது முடித்த முடிவாக உள்ளது அது ஏன் ? இந்திய ராணுவத்தில் நடை பேரும் ஊழல்கள் அதிகார மீறல்கள் தலைவிடங்கள் திருட்டு ராணுவ ரகசியம் கைமாற்றல் இதில் ஒன்றுகூட படம் ஆக படவில்லை ஏன் என்று காட்டுக்கு ஈஸ்வர் சொல்லுவார் ??/


Oru Indiyan
நவ 10, 2024 09:06

இப்படிப்பட்ட துரோகங்களை செய்யும் மிருகங்களை கைது செய்ய ஏன் பயம்? வாக்கு பயமா?


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2024 08:10

அந்த பயம் எனக்கும் இருக்கு, அன்று நாட்டினை ஆங்கிலேயருக்கு காட்டி கூட்டி கொடுத்தவர்களின் வம்சாவழியினர் இன்று அதனை செவ்வனே செய்வதும், தமிழர்கள் தூங்கி கொண்டிருப்பதும் வேதனை தருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை