உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சென்னை: போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் சவுக்கு சங்கர் கூறியதாவது: அஜித்குமாரை போலீசார் அடித்துக் கொன்றதற்காக அவரது வீட்டிற்கு போன் செய்து முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கிறார். தமிழக போலீசாரின் செயல்பாட்டிற்கு தினம் தோறும் ஒவ்வொரு இடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அளவுக்கு அவலமான சூழ்நிலையில்தான் தமிழக காவல்துறை இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=twlzpgom&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அராஜக சூழ்நிலை

அஜித் குமார் நகையை திருடியிருக்கிறானா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவனை அடித்து கொன்று இருக்கிறார்கள். இப்படிதான் தமிழக காவல்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவரும் (முதல்வர் ஸ்டாலின்) கூச்சமே இல்லாமல் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். போலீசாருக்கு எதிராக யாருமே பேசக்கூடாது என்ற அராஜக சூழ்நிலை தமிழகத்தில் நடக்கிறது.

காட்டாட்சி

தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. கடத்தல் செய்யும் அதிகாரிகளை எல்லாம் பதவியில் அமர்த்தி விட்டு மன்னிப்பு கேட்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். இந்த அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்கு நாட்டை ஆள்கிறார். போலீஸ் திட்டமிட்டு செய்கிறது. முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுகளை போலீசார் மதிப்பதில்லை. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு பணி கொடுத்தால் எப்படி பயம் வரும். அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத முதல்வர் எப்படி நாட்டை ஆள்வார் என்று யோசித்துப் பாருங்கள். தனிப்படைகள் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்க வில்லை. தனிப்படைகளை கலைத்தது வரவேற்கத்தக்கது. இதனை முன்பே செய்திருக்க வேண்டும். ஏனென்றால், தனிப்படைகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி, செயல்படுகிறது. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Manaimaran
ஜூலை 02, 2025 21:12

சமகாலத்தில் துணிச்சலாக பேச கூடியவர் பாராட்ட தக்கது ஒரு நாளிதல் தவிர (தினமலர்) மற்றவை, எல்லாம் அடமானம் வைக்கபட்டது


Ramesh Sargam
ஜூலை 02, 2025 20:27

பதில் இருந்தால்தானே தெரிவிப்பாங்க.


Santhakumar Srinivasalu
ஜூலை 02, 2025 20:21

பேட்டி கொடுக்கும் அளவுக்கு இவரை இயக்கும் சக்தி எது?


V Venkatachalam
ஜூலை 02, 2025 22:28

சவுக்கு சங்கரை இயக்கும் சக்தி எதுன்னு தெரிஞ்சுக்க வேண்டுமா? அவரை இயக்கும் சக்தி சாராய வியாபாரி தான். இது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க இதைப் பத்தி கேட்பதற்கு உங்களை இயக்கும் சக்தி எது?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 02, 2025 23:41

அஜீத் குமாரை அடித்தே கொல்லச் சொன்ன சக்தி எது?


Anantharaman Srinivasan
ஜூலை 03, 2025 00:20

பேட்டி கொடுக்கும் அளவுக்கு இவரை இயக்கும் சக்தி எது? நேர்மை, துணிச்சல், துய்மையான மனசாட்சி பேச சொல்கிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை