உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவி பறிப்பு... தொடர்கிறது! முன்னாள் பெண் எம்.பி.,யும் பொறுப்பிலிருந்து நீக்கம் இ.பி.எஸ்., அதிரடியால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவி பறிப்பு... தொடர்கிறது! முன்னாள் பெண் எம்.பி.,யும் பொறுப்பிலிருந்து நீக்கம் இ.பி.எஸ்., அதிரடியால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்படுவது தொடர்கிறது. நேற்று முன்னாள் எம்.பி., சத்யபாமாவின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. பழனிசாமியின் இந்த அதிரடியான செயல்பாடுகளால், கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க இயலாது என்பதில், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக உள்ளார். இந்நிலையில், 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராஜினாமா கடிதம்

உடன், கட்சியின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை விடுவிப்பதாக பழனிசாமி அறிவித்தார். மேலும், அவரது ஆதரவாளர்களான, நம்பியூர் வடக்கு, தெற்கு ஒன்றிய செயலர்கள், கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலர், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலர், அத்தாணி பேரூராட்சி செயலர், ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் ஆகியோரின் கட்சி பதவியையும் பறித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர், தங்களின் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அவரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அத்துடன், அ.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலர் பொறுப்பில் இருந்த, முன்னாள் எம்.பி., சத்யபாமா, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக செங்கோட்டையனிடம் கடிதம் அளித்தார்.

பட்டியல் சேகரிப்பு

இதையடுத்து, சத்ய பாமாவும் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக பழனிசாமி நேற்று அறிவித்தார். அதேபோல, திருப்பூர் மாவட்டம், பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சித்துராஜ். நேற்று முன்தினம், அ.தி.மு.க., சமூக வலைதள குழு ஒன்றில், 'செங்கோட்டையனின் கருத்துகள் சரியே; அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க வேண்டும்' என்று பதிவிட்டு இருந்தார். அதனால், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலர் பொறுப்பில் இருந்து சித்துராஜ் உடனடியாக விடுவிக்கப்படுவதாக பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 12ல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பல்லடம் நகருக்கு பிரசாரத்துக்காக செல்ல உள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வில் யாரெல்லாம், செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனரோ, அவர்களை கண்காணித்து, அவர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், கட்சி தலைமை தீவிரமாக உள்ளது. இதற்காக, தமிழகம் முழுதும் இருக்கும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, அவர்களின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நீக்கப்பட்டனர். அதுபோல தற்போது, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பழனிசாமி பறித்து வருவது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐ.டி., அணி நிர்வாகி ஆதரவு அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவர் மணிகண்டனின் அறிக்கை: அ.தி.மு.க.,வுக்கு பக்கபலமாக இருந்தவர் செங்கோட்டையன். அவரை கட்சியில் இருந்து நீக்க, எவருக்கும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஏனென்றால், செங்கோட்டையனையும், அ.தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது. செங்கோட்டையன் வழியில் அ.தி.மு.க. ஒன்றுபட, அனைவரும் தங்கள் குரலை உயர்த்த வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது அவசியம் என்ற சசிகலா, செங்கோட்டையன் வழியில் இனி செயல்படுவோம். வரும் சட்டசபை தேர்தலில், சுயநலம் கருதாமல், அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பின்னணியில் துாண்டுதல் செங்கோட்டையனுக்குள் ஓடக்கூடிய ரத்தம் அ.தி.மு.க., ரத்தம் என ஒருவர் பேசியுள்ளார். ரத்தத்தில், ஏ, ஓ, வகைகள் இருக்கலாம். அ.தி.மு.க., ரத்தம் என ஒன்று கிடையாது. ரத்த வகையைச் சொல்பவர்கள் தான், செங்கோட்டையன் பின்னணியில் இருந்து துாண்டுகின்றனர். கட்சியில் இணைத்தால் போதும்; பதவி எதுவும் வேண்டாம் என பன்னீர்செல்வம் சொல்வது, தன் மீது மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்துவதற்காகவே. செங்கோட்டையன் டில்லிக்கு சென்றார்; பலருடன் பேசி திரும்பினார். இப்போது, பொதுச்செயலருக்கு கெடு விதிக்கிறார். இதெல்லாம் செங்கோட்டையனுக்கு நல்லதல்ல. - தளவாய் சுந்தரம், அமைப்பு செயலர், அ.தி.மு.க., - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Tamilan
செப் 08, 2025 20:57

அவர் வெளியிலேயே ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறிய பிறகு இப்படி ஒரு மார்தட்டல்


Tamilan
செப் 08, 2025 20:56

அதிமுகவிற்கே அதிர்ச்சியடையவைக்கும் நடவடிக்கை என்பது எதிரிகளின் வேலை. எதிரிகளுக்கு அதிமுகவை பலிகடா ஆக்கிவிட்டார்கள்


Kjp
செப் 08, 2025 19:32

கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் சொல்வதெல்லாம் சரிதான். அதற்கு பத்து நாள் கெடு விதித்தது தான் தவறு ஏதோ ஒரு வில்லங்கம் பண்ணுவதற்காகவே கெடுவித்திருக்கிறார் செங்கோட்டையன்.


kumaran
செப் 08, 2025 19:28

பழனிச்சாமி சர்வாதிகார மனப்பான்மையோடு நடந்து கொள்கிறார் இதன் மூலம் திமுக வை ஆட்சி கட்டிலில் அமர வைக்க நினைக்கிறார் ஏனெனில் கடந்த கால தேர்தலில் அதிமுக பிரிந்ததால் ஓட்டு சிதறியது இது பழனிச்சாமிக்கு நன்றாக தெரியும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருகிறேன் என்றவர் இப்போது மறுத்து விட்டார் இச்செயல் கூட்டணியை நம்பிக்கை இல்லாமல் பலவீனமாக்கும் ஒரு வேளை இது திமுகவின் நகர்வாகவும் இருக்கலாம்.


Raja
செப் 08, 2025 16:45

அண்ணாமலை+பன்னீர்+தினகரன் = நல்ல கூட்டு=மீண்டும் திமுக ஆட்சி....


தமிழ் மைந்தன்
செப் 08, 2025 15:17

வெற்றி வாய்ப்பை மீண்டும் திமுகவுக்கே கொடுப்பதற்காக பழனி கட்சியைக் காலி செய்துவிடுவாரோ ???? ஆமாம். வாக்களிப்பது மக்களின் கடமை. ஊழல், கொலை, கொள்ளை மோசடி கஞ்சா விற்பனை ரவுடிகளின் ஆட்சி என மக்கள் விரும்பினால் அதற்கு பழனிச்சாமி பொறுப்பாக முடியாது. காமெடி மற்றும் சூட்டிங் நடத்தும் பொம்மை முதல்வரை மக்களே தோ்ந்தெடுக்க வேண்டும்.


venkatan
செப் 08, 2025 14:31

The bjp shoul introspective its policies w r t alliance with local partners whom they are sieved for cleanness and integrity.There is no compromise..As a true honest friend to be the bjp is entrusted to mend the party.corrupt dealers of any kazagam should be shunned off.The party and the ideology should be in tact.the alliance party should be from any misery


Barakat Ali
செப் 08, 2025 13:39

வெற்றி வாய்ப்பை மீண்டும் திமுகவுக்கே கொடுப்பதற்காக பழனி கட்சியைக் காலி செய்துவிடுவாரோ ????


Santhakumar Srinivasalu
செப் 08, 2025 13:04

மூத்த தலைவர்களை அனுசரிக்க வில்லை என்றால் தொற்று ரெய்டு வரும்! அப்புறம் குடும்பம் மற்றும் சம்பந்தகளுக்கும் சிக்கல் தான்!


Kadaparai Mani
செப் 08, 2025 12:01

Those writing comments here are either BJP and DMK supporters. EPS trying his level best to improve AIADMK in the absence of MGR and Amma. These dmk and BJP never expected that he will gather such big crowds in the tour of 142 constituencies. The same BJP and dmk writers wrote tons of bad opinion about sasikala and dinakaran.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை