உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி குதிரை பந்தய மைதானம் மீட்பு; அரசுக்கு ரூ.822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவை

ஊட்டி குதிரை பந்தய மைதானம் மீட்பு; அரசுக்கு ரூ.822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரசுக்கு 822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவையில் உள்ள காரணத்தினால் பிரபலமான ஊட்டி குதிரை பந்தய மைதானத்தை வருவாய் துறையினர் மீட்டனர். கடந்த 21 ஆம் தேதி முறையாக மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தகுந்த பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. இந்த குதிரை பந்தயங்களானது உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

1978 முதல் நிலுவை

இந்நிலையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகமானது அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 முதல் கட்டாமல் இருந்துள்ளது.இதுவரை 822 கோடி ரூபாய் வரை குத்தகை தொகையானது நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 21.6.2024 அன்று மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.ஆனால் அந்த நோட்டீஸ்க்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகமானது பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.பாக்கி தொடர்பான பிரச்னையில் வருவாய்துறையினர் , ரேஸ் கோர்ஸ் மேலாளரிடம் நோட்டீஸ் வழங்கி சீல் வைத்தனர். தொடர்ந்து ரேஸ்கோர்சை சுற்றி ஆங்காங்கே இந்நிலம் அரசுக்கு கையகப்படுத்தப்பட்டது என்ற பேனர் வைத்தனர். மேலும் குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலக கட்டிடங்கள் நிர்வாக கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. மேலும் எந்த விதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

VENKATESAN V
ஜூலை 05, 2024 17:24

மின்சார கட்டணம் கட்ட வில்லை என்றால் மின் துண்டிப்பு ஏழைக்கு அனால் 822 கோடி பாக்கி இருந்தாலும் பணக்காரனுக்கு அது பொருந்தாது


Sridharan
ஜூலை 05, 2024 17:19

வாழ்க தமிழ் குடும்பம் ஒரே குடும்பம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 05, 2024 14:17

விரைவில் ஹெலிபேட் கூடிய வீட்டு மனைகள் ஊட்டியில் விற்பனைக்கு. லூலூ மால் உள்பட அனைத்தும் உள்ளேயே. ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இப்பொழுது இருந்து தயாராக இருக்கவும்


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 05, 2024 13:43

ஜீ ஸ்கொயர்ல ஊட்டில வீட்டுமனை வாங்க எந்த வாங்கில கடன் கொடுக்கிறாங்க?


KRISHNAN R
ஜூலை 05, 2024 12:19

ரிபான் கூலிங் கிளாஸ் அண்ட் ரீபொக் ஷூ


Ganapathy Subramanian
ஜூலை 05, 2024 12:06

செட்டியார் இருந்தவரை நடவடிக்கை இல்லை. ஏனென்றால் அவர் எப்போதுமே ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர். அவர் காலமானவுடன் நடவடிக்கை.


ஆரூர் ரங்
ஜூலை 05, 2024 12:02

கருணா குதிரைப் பந்தயத்தையே தடை செய்தார். அதன் நினைவாக சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் குதிரை சிலையும் அமைத்தார். ஆனால் இன்றும் சென்னையில் அரசு நிலத்திலேயே ரேஸ் நடக்கிறது. அதிக பந்தயக் குதிரைகள் வைத்திருந்தவர் கலைஞரின் நெருங்கிய நண்பர். இந்த அழகில் ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம் என்று நாடகமாடுகிறார்கள்.


ram
ஜூலை 05, 2024 10:54

இன்னும் கொஞ்ச நாளில் திருட்டு திமுக பினாமி ஆட்கள் கைக்கு போய் விடும்.


sundarsvpr
ஜூலை 05, 2024 14:14

1967 இல் இருந்து தமிழ்நாடு அரசு யாரிடம் உள்ளது. சொல்லி தெரிவதில்லை மன்மத கலை


sundarsvpr
ஜூலை 05, 2024 10:19

1978 இல் இருந்து பாக்கி தொகை வசூல் செய்திட இயலாமை மிகவும் வெட்கக்கேடானது.. தனி மனிதன் என்றால் தற்கொலை பண்ணிக்கொள்வான் காரணம் மனிதன் உயிர் உள்ளவன். . அரசு என்பதால் இது மாதிரி செய்ய இயலாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை