உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாழடைந்த துறையாக மாறிய பள்ளிக்கல்வி துறை

பாழடைந்த துறையாக மாறிய பள்ளிக்கல்வி துறை

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்கும், பள்ளிகள், ஆசிரியர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்கள் இவர்கள் தான். இவர்கள் இல்லாவிட்டால், பள்ளிக்கல்வித் துறை முடங்கிவிடும். அனைவருக்கும் கல்வி திட்டப் பணிகள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் செயல்படுத்த வேண்டும்.கல்விப் பணிகள் குறித்து முடிவெடுப்பதும், கற்றல், கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதும், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள். ஆனால், பல மாவட்டங்களில், இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை, பாழடைந்த துறையாக மாறியுள்ளது. - அன்புமணி தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி