உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் எஸ்.பி.பி., சாலை... பெயர் சூட்டி கவுரவித்தது தமிழக அரசு

சென்னையில் எஸ்.பி.பி., சாலை... பெயர் சூட்டி கவுரவித்தது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை, அவரது வீடு இருக்கும் காம்தார் நகர் முதல் தெருவுக்கு சூட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடும் நிலா என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.பி.பி., கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a34yjv2m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு இவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று அவருக்கு 4வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்.பி.பி.,யை கவுரவிக்கும் விதமாக, அவர் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது பெயருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் முன் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பு எஸ்.பி.பி.,யின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
செப் 25, 2024 22:18

பெயர் வைப்பதிலும், பெயர் மாற்றம் செய்வதிலும், சிலை வைப்பதிலும் தமிழகத்தை யாராலும் முந்த முடியாது. மக்களுக்கு தேவையான குடி தண்ணீர் போன்றவற்றை தரமாட்டார்கள். ஆனால் இப்படி அனாவசியமாக செலவு செய்வார்கள்.


Matt P
செப் 25, 2024 22:53

இப்படி பெயர் வைப்பதில் எந்த செலவும் வந்துவிடாது. மூலை முடுக்கு சந்து பொந்துகளில் எல்லாம் அப்பன் பெயர் வைக்கிறேன் என்று ஒரே பெயர் வைப்பது தான் பிரச்னை. ஒரு ஊருக்கு போய் கருணாநிதி தெரு என்று கேட்டால் இங்கு அஞ்சு கருணாநிதி தெரு இருக்கிறது. எந்த கருணாநிதி தெரு என்று யாராவது கேட்டால் தான் பிரச்னை.


narayanansagmailcom
செப் 25, 2024 22:05

ஸ்டாலுனுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது. ஆர்கன் விளைவு தான் இது


ஆரூர் ரங்
செப் 25, 2024 21:56

ராயப்பேட்டை பக்கமுள்ள கொலைகாரன் பேட்டை பெயரை எப்போ மாற்றுவார்கள்?.வெளியாட்கள் குடிவரக்கூட அஞ்சுகின்றனர்.


குமார்
செப் 25, 2024 21:52

அவருடைய புகழுக்கு தெருவின் பெயர் மட்டுமல்ல மேம்பாலம் ரயில் நிலையம் விமான நிலையம் விளையாட்டு அரங்கம் போன்ற முக்கிய இடங்களில் அவர் பெயரை வைப்பதில் தவறில்லை பெயர் நீங்கள் வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவருடைய குரல் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது


Anu Sekhar
செப் 25, 2024 21:28

ஒரு நல்ல காரியம் பாராட்டத்தக்கது. எது மாதிரி நல்ல திட்டங்களை எந்த கட்சி செய்த்தாலும் ஆதரியுங்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும்.


A P
செப் 25, 2024 20:54

எஸ் பி பாலசுப்ரமணியன் சாலை என்றுதானே பெயர் வைக்கப்படுகிறது. எஸ் பி பி சாலை என்று சொன்னால் 50 வருடங்களுக்குப் பிறகு அது யாருடைய பெயர் என்று தெரியாமலே போய்விடும். இன்று சென்னையில் " கலைஞர் கருணாநிதி நகர் " எங்கு உள்ளது என்று கேட்டால் பல பேருக்குத் தெரியாது. கே கே நகர் என்றால்தான் புரிகிறது. ஜெ ஜெ நகரும் அப்படித்தான் ஆகிவிட்டது. அண்ணாதுரை பெயரில் நகர் பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று " அண்ணா நகர் " என்று வைத்துவிட்டார்கள். பிற்காலத்தில் கழகத்தின் ஏதாவது ஒரு பேர்வழி, இந்த ஏரியா பூராவும் என் அண்ணனுக்குச் சொந்தம் . அவருக்கு வாரிசு இல்லையாதலால், நான் தான் பூரண வாரிசு, எல்லோரும் இடத்தைக் காலிபண்ணுங்க என்று சொன்னாலும் சொல்வான். ஒன்றை மறந்துவிட்டேன் . எஸ் பி பி ஒரு பிராமணர் அல்லவா? கழக ஆட்சியில் அவர் பெயர் எப்படி .............


Barakat Ali
செப் 25, 2024 19:27

Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station என்று எத்தனை பேர் சொல்கிறோம் ?? இன்னும் சென்னை சென்ட்ரல் என்றுதானே சொல்கிறோம் ?? தமிழகத்தில் உள்ள தெலுங்கர்களின் வாக்குகளை பெறும் முயற்சி ....


VASANTHA RANI
செப் 25, 2024 19:12

தமிழக அரசுக்கு பெருமை


அஸ்வின்
செப் 25, 2024 18:28

நல்லது


புதிய வீடியோ