உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., சேரும் அணி மிகப்பெரிய வெற்றி பெறும்; ராமதாஸ்

பா.ம.க., சேரும் அணி மிகப்பெரிய வெற்றி பெறும்; ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: ''பா.ம.க., எந்த அணியோடு சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வெற்றியை பெறும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி வன்னியர் மகளிர் பெருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விழா நடைபெறும் மைதானத்தை இன்று ராமதாஸ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பூம்புகாரில் இது போன்ற மாநாடு 13 முறை நடந்துள்ளது. சற்று இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. பெண்மையைப் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் நிலம் அதிகமாக இருந்தால் கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.பா.ம.க., எந்த அணியோடு சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வெற்றியை பெறும். பா.ம.க,வில் தொண்டர்களுக்குள் குழப்பம் இல்லை. பா.ம.க.,வில் தற்பொழுது குழப்பம் ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார். அன்புமணி மாநாட்டில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு, ''போக போக தான் தெரியும்'' என பாடல் மூலம் ராமதாஸ் பதில் அளித்தார். தி.மு.க., உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, ''பத்து காக்கா பறந்தது. அதில் ஐந்து காக்கா வெள்ளை காக்கா, அதுதான் சொல்லி இருக்கும் என நினைக்கிறேன்'', என ராமதாஸ் சிரித்தப்படி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

panneer selvam
ஜூலை 11, 2025 18:17

Dr. Ramdass ji becomes a good comedian . Every day morning , his paper reading is amazing . Everyone is getting entertained. Please continue


Rengaraj
ஜூலை 11, 2025 15:30

எங்களோடு வாங்க - நிறைய சீட் தாறோம், என்ன வேணும்னாலும் செய்யறோம், - இது அதிமுக. எங்களோடு வராட்டலும் பரவாயில்லை , அங்க போகாதீங்க - அதுக்கு என்னவேனும்னாலும் தாறோம் இது திமுக . இப்ப புரியுதா ஏன் எங்களுக்குள் சண்டைன்னு. - இது பாமக ,


SIVA
ஜூலை 11, 2025 14:41

இன்றைய நிலையில் பாமக இரண்டாக பிரியலாம் , ஒரு அணி திமுக உடன் ஒரு அணி அதிமுகவுடன் எப்படி பார்த்தாலும் பாமகவுக்கு லாபம் , ஆனால் திமுக அணியில் இடம் உள்ளதா என்பது சந்தேகமே ....


vadivelu
ஜூலை 11, 2025 14:09

தி மு க வுடன் சேர்ந்தால் பா மா க சில இடங்களில் வெற்றி பெரும். ஏன் என்றால் அது இப்போது பலமாக இருக்கிறது, பா மா கா இல்லாமலேயே வெற்றி பெரும். பா மா கா அண்ணா தி மு க உடன் இருந்தால் தி மு க பலவீனமாகும். அப்போதும் பா மா கா சில இடங்களில் வெற்றி பெரும். அதைத்தான் ராமதாஸ் பா மா கா இருக்கும் அணி வெற்றி பெரும் என்கிறார்.


Anand
ஜூலை 11, 2025 13:42

இப்போதே கடையை விரித்து வைத்துவிட்டார்....


S Balakrishnan
ஜூலை 11, 2025 13:13

வாழ்க்கையில் மாபெறும் வெற்றி கண்ட ஒரு வன்னியன் இந்த ஆள். வன்னியர்களை பலி கொடுத்து கட்சி ஆரம்பித்து வன்னிய சமுதாயத்தை காட்டி மாறி மாறி கூட்டணி வைத்து சம்பாதித்து விட்டு இப்போது பேசுவது வழக்கம் போல் அடுத்த சம்பாதியத்துக்காக என்பது நன்றாக தெரிகிறது.


Anantharaman Srinivasan
ஜூலை 11, 2025 12:47

திமுவுடன் ஒட்டிக்கொள்ள முயற்சிக்கிறது.


C.SRIRAM
ஜூலை 11, 2025 12:46

எந்த கூட்டணி வெற்றிபெற்றாலும் பா ம க தோற்கடிக்கப்படவேண்டும்


mohana sundaram
ஜூலை 11, 2025 12:38

வயதுக்கு ஏற்ற அல்லது படிப்புக்கு ஏற்ற அறிவு என்பது சிறிதும் இல்லாத மனிதர் நீர். பெட்டி எங்கு கிடைக்கும் அங்கே போய் சேரும்.


Ramesh Sargam
ஜூலை 11, 2025 12:37

பா.ம.க., பேசாம தனியாக நின்று வெற்றிபெற முயற்சிக்கலாமே?


புதிய வீடியோ