உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களோட பலத்தை பொறுத்து தான் சீட் உண்மை விளம்பிய பெருந்தகை

எங்களோட பலத்தை பொறுத்து தான் சீட் உண்மை விளம்பிய பெருந்தகை

சென்னை: ''அமைச்சரவையில் பங்கு கேட்க வேண்டும் என, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் கேட்பது, அவரது தனிப்பட்ட கருத்து,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார்.அவரது பேட்டி: 'தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம்; அமைச்சரவையிலும் பங்கு கேட்போம்' என, காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. டில்லி மேலிடம் அனுமதியில்லாமல், ஆட்சியில் பங்கு குறித்து என்னால் எதுவும் பேச முடியாது.தமிழகத்தில் காங்கிரஸ் எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதை மேற்கோள் காட்டித்தான், தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து டில்லி தலைமை பேசும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், காங்கிரஸ் சார்பில் 25,000 ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை