உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும்: தமிழிசை

சி.பி.ஐ., விசாரணை நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும்: தமிழிசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவ . குற்றவாளிகளுக்கு தி.மு.க., அரசு உறுதுணையாக இருப்பதாக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா பல்கலை சம்பவம் உள்பட தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான பா.ஜ., மகளிர் அணியினர் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y6oofo98&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: அறிவிக்கப்படாத அவசரநிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவி, இன்னொரு சார் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறியதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்த சாரை ஏன் மறைக்கிறீர்கள். அந்த சார் எங்கே இருக்கிறார். போலீஸ் கமிஷ்னர் சொல்லும், அப்படியொரு சார் எல்லாம் இல்லை என்றார். யாரை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். எந்த ஊரைச் சார்ந்தவன் இந்த சார். எந்த இயக்கத்தை சார்ந்தவன் இந்த சார், என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் மனு கொடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 30.8.24ல் 4ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 14.08.24ல் 4 பேர் சேர்ந்து கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். அதில், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 06.08.23ல் வளசரவாக்கத்தில் ஒரு வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அதிலும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளது. அதேபோல, 12.04.23ல் 6 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, 02.01.23ல் நடந்த வன்கொடுமை சம்பவத்திலும், தி.மு.க.,வினருக்கு தொடர்பு. பெண் கான்ஸ்டபிள் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது, அதுவும் இங்கு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல்கலைக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் ஏதோ ஒன்று நடந்திருச்சு, என்பதை கேட்டு செல்ல முடியாது. முதல்வரோ, துணை முதல்வரோ ஏன் குரல் எழுப்பவில்லை. எங்கேயோ ஒரு மாநிலத்தில் நடந்திருந்தால் முதல்வர் குரல் கொடுக்கிறார். விசாரணை முடிந்தால் அந்த சார் தெரிந்து விடும் என்று கனிமொழி கூறுகிறார். விசாரணை சரியாக நடக்காது என்பதால் தான் நாங்கள் பயப்படுகிறோம். குற்றவாளிகளுக்கு தி.மு.க., அரசு உறுதுணையாக இருக்கிறது. போராடும் பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள். கைதாக வேண்டிய குற்றவாளிகள் நடமாடுவார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. சி.பி.ஐ., விசாரணை நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
ஜன 05, 2025 08:31

இன்னுமா சி.பி.ஐ விசாரணையை நம்புறீங்க?


D.Ambujavalli
ஜன 05, 2025 07:21

எப்படி? செந்தில் பாலாஜி தம்பியை பிடித்துக்கொண்டு வந்து நிறுத்தியது போலவா ?


Dharmavaan
ஜன 05, 2025 07:03

சுடலை கட்டுப்பாட்டில் உள்ள எந்த துறை போலீஸ் உட்பட விசாரணை செய்தாலும் உண்மை வெளிப்படாது கோர்ட் செயல் வெறும் கண்துடைப்பு


V வைகுண்டேஸ்வரன்
ஜன 04, 2025 22:26

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், மனஉளைச்சல் தாங்காமல் விபரீத முடிவுக்குப் போகும் வரை இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் விட மாட்டார்கள் போலிருக்கிறது.


ghee
ஜன 05, 2025 05:59

அப்படியா அந்த சார் யாருனு சொள்ளிடிங்கன்ன நல்ல இருக்கும் வைகுண்டம் பெரியவரே


அருணாசலம்
ஜன 05, 2025 07:28

வைகுண்டம் சொல்றத பார்த்தா அது தான் நடக்கப் போகுதா? கடந்த கால அனுபவம் பேசுகிறது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 04, 2025 22:24

ஒரு மாநிலம், ஒரு ஒன்றிய பிரதேசம் என்று 2 பெரிய கவர்னர் பதவியில் இருந்தவர் இப்போது இப்படி மதிப்பிழந்து நிற்பது வருத்தத்திற்குரிய காட்சி. ஒரு கவர்னர், அரசியல் கட்சிகளின் மனுவை, மாநில அரசுக்கு பார்வேர்ட் செய்ய இயலாது, கூடாது. அதுவும் நிலுவையில் இருக்கும் வழக்கு, விசாரணை பற்றி ஊடகங்களில் பேசுவதோ பேட்டி அளிப்பதோ கூட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று முன்னாள் ஐ பி எஸ் க்கும் தெரியல, நடிகர் விஜய் க்கும் தெரியல, தமிழிசை க்கும் தெரியல????


ghee
ஜன 05, 2025 06:00

gazetted officer கூட அரசியல் பேசக்கூடாது.....ஹி. ஹி


Dharmavaan
ஜன 05, 2025 07:05

கூடாது என்பது எந்த சட்டம் காட்ட முடியுமா அவர் தலையிடும் அளவுக்கு இங்கு நிலைமை கேவலமாக உள்ளது என்பதே


GMM
ஜன 04, 2025 21:57

பாதிக்கப்பட்ட மாணவிக்கு, நீதி கிடைப்பதை, குற்றவாளிகள் தண்டிக்க படவுள்ளதை இன்று கணிக்க முடியாது. திராவிடம் கழுவுற மீனில், நழுவும் மீன். சிபிஐ விசாரணையில் கூட ஆட்சியில் இருந்தால், எளிதில் சிக்காது. உச்ச மன்றத்தில் வலுவான ஆதரவு இருக்கும். ? தன் குடும்ப பெண் பிள்ளை போல் பாவித்து, பிஜேபி மகளிர் அணி சிபிஐ விசாரணை கோருவது நடுநிலை மக்களை சிந்திக்க செய்யும். காங்கிரஸ் தேசிய கட்சி. ஒரு பேருக்கு மகளிர் அணி கண்டனம் கொடுத்து, விசாரணை கேட்க கூடாதா?


Ramesh Sargam
ஜன 04, 2025 21:14

அது சரி. ஆனால்.... ஆனால் குற்றம் செய்தவர்களுக்கு தகுந்த, கடுமையான தண்டனை கிடைக்குமா? அதுதான் மிகவும் கவனிக்கப்படவேண்டிய விவகாரம். ஏன் என்றால் பல குற்றவழக்குகளில் குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறுவதே இல்லை. காரணம் நீதிமன்ற செயல்பாடுகள்.


திகழ்ஓவியன்
ஜன 04, 2025 20:38

எப்படி இருந்த அம்மணி மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு மோசம் போயி இன்று தெரு தெருவா போய் குறளி விதை எல்லாம் காட்டி , அரெஸ்ட் செய்த போது பஸ் ஜன்னல் ஓரம் பார்க்கவே பாவமா இருந்தது.இப்போ தலைவர் பதவிக்கு இப்படி எல்லாம் போட்டி போட்டு செய்ய வேண்டி இருக்கு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 04, 2025 20:48

இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தேன் திகழ்.....பரவாயில்லை 2026 குள் திகழுக்கு பைத்தியம் முத்திடும்...!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை