உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்

ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள். அந்த நேரத்தில் உங்கள் யோசனைகளையும் கேட்கிறேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று யோசனை சொல்வீர்களா? ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டது, யார் வைத்தார்கள். யார் இங்கே கொண்டு வந்து சார்ஜ் போட்டார்கள், யார் சொல்லி வைத்தார்கள் என்பது எல்லாம் விசாரணையில் இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில், அது அம்பலத்திற்கு வரும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.இதையடுத்து, நிருபர் ஒருவர், ''இதில் யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு, ''சந்தேகம் இருக்கிறது. உங்கள் மேல் தான் இருக்கிறது'' என ராமதாஸ் பதில் அளித்துவிட்டு சிரித்தார். பின்னர், ''போலீசார் விசாரணை தொடங்கி விட்டனர். இன்று காலையில் 8 பேர் வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் சைபருக்கு கீழே மைனசாக போய்ட்டாங்க, சைபர் கிரைம் ஒன்று தமிழகத்தில் ஒன்று இருக்கிறதா, இல்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Premanathan Sambandam
ஜூலை 17, 2025 21:35

இந்த நியூஸ் யாருக்கு? சல்லிக்காசு பெறாத சப்பை மேட்டர்.


Easwar Kamal
ஜூலை 17, 2025 18:34

வயசான காலத்துல எதுக்கு வீண் வீராப்பு. எப்படி வைகோ மகன் என்றதும் பல காலம் தொண்டர்கள் எல்லாம் அப்புறம் என்று தூக்கி எறிந்தாரோ அதை போன்று மகன் சேர்ந்து பயணிக்கலாம். கண்டிப்பாக நீர் எந்த பக்கம் போவேறோ அதுக்கு எதிர் பக்கம் தான் உங்கள் மகன் செல்வார். இதனால் ஓட்டுகள் பிரியும். ஏற்கனவே 2 அலலது 3 –ம் நிலையில் தான் உள்ளனர் உங்கள் தொகுதியில். அதை விட கீழே சென்று விடுவீர்கள் இரண்டு பேரும் .


பாரத புதல்வன்
ஜூலை 17, 2025 14:57

உன்னோட கட்சியும் சைபரு தான்.


SUBBU,MADURAI
ஜூலை 17, 2025 17:36

கடைசியில் ஒன்றிய அரசின் மீது பழியை போட முடிவு செய்து விட்டது இந்த முத்தின மாங்காய்..


Narayanan
ஜூலை 17, 2025 14:55

பாமக கோமாளிகட்சிமாதிரி ஆகிவிட்டதே அசிங்கம் . ராமதாஸ் அன்புமணிக்கு மகுடம் சூட்டி அழகுபார்ப்பதே சிறந்தது . எப்படியும் ஆட்சியை பிடிக்கப்பபோவதில்லை 37 வருடங்களை பணம் பண்ணுவதிலியே இருந்து பெரும்பணக்காரர் ஆகிவிட்டார் .


ponssasi
ஜூலை 17, 2025 14:09

கருவி வைத்த நபரை நீங்கள் முன்கூட்டியே முடிவுசெய்துவிட்டிர்கள் போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை