உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

மயிலாடுதுறை: தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து பெருமாளை சேவித்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரில் செங்கமல வல்லி தாயார் சமேத ஆமருவியப்பன் கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இந்தக் கோவிலின் வைகாசி பெருவிழா கடந்த 10ம் தேதி பூர்வாங்க பூஜைகள், 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25ம் தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் 9ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று காலை ரிஷப லக்கனம், திருவோண நட்சத்திரத்தில் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு தாயார் சமேயதராய் ஆமருவியப்பன் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அப்போது பட்டாச்சாரியார்கள் மகா தீபாராதனை காண்பித்த பின்னர் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். பின்னர் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலில் நான்கு வீதிகளையும் வலம் வந்த போது அப்பகுதி மக்கள் பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தேரிழை தங்க. சிவா, TZR ( ஜூரோங் வெஸ்ட், சிங்கப்பூர், )
மே 19, 2025 15:16

இது நான் பிறந்த ஊர் தேரிழந்தூர் என்பதில் பெருமையடைகிறேன் . 2000 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், ஒவ்வொரு மூலைக்கும் ஒரு புனித கதையும், ஒவ்வொரு தரிசனத்திற்கும் ஒரு ஆழ்ந்த ஆன்மீக அனுபவமும் உள்ளது. வைணவத்தை பின்பற்றுபவரோ, ஆன்மீக ஆர்வமுள்ளவரோ யாராக இருந்தாலும், தேரழுந்தூர் தரிசனம் நிச்சயம் ஒரு வாழ்நாள் அனுபவமாக அமையும் கோவிந்தா ..கோவிந்தா ..


Sriniv
மே 19, 2025 12:16

பெருமாளே உன் திருவடி சரணம் ஸ்ரீனிவாசா கோவிந்தா கோவிந்தா ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்