உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்களே அதிகம்!

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்களே அதிகம்!

சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் நேரடியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=metg9g04&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாக்காளர் சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்தவர்கள் பெயரை நீக்கி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை; இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர் தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் (நாகை) மொத்த வாக்காளர்கள் : 1,76,505துறைமுகம் (சென்னை) மொத்த வாக்காளர்கள்: 1,78,980அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லுார் உள்ளது. சோழிங்கநல்லுார் தொகுதி (செங்கல்பட்டு) மொத்த வாக்காளர்கள்: 6,90,958 பேர்கவுண்டம்பாளையம் தொகுதி (கோவை) மொத்த வாக்காளர்கள்: 4,91,143'இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100/-வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம்.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை '1950' என்ற கட்டணமில்லாத்தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2025 15:57

எனுங்க நீங்க சொல்லி இருக்கற கணக்கு பேப்பர் கணக்குங்கோ. தேர்தல் வரும்போது கழக தேர்தல் ஆணையம் எவ்வளவு வாக்காளர்களுக்கு பெயரை நீக்கும் அப்படீன்னு சொல்லிப்போடுங்கோ அம்மணி. இப்போ கடைசியா நடந்த டெல்லி ஏலக்சனுக்கு கோயம்புத்தூர்லா ராம் நகர்ல மட்டும் ஒரு லட்சம் பேருக்கு ஓட்டு இல்லே ன்னு சொல்லிப்போட்டீங்கோ


Kumar Kumzi
ஜன 06, 2025 15:02

இப்போ புரிகிறதா மகளிர்க்கு இலவச பஸ் ஆயிரம் ஓவான்னு ஓசிகோட்டர் கொத்தடிமைங்க போஸ்ட்டர் ஓட்ட மட்டும் தான் லாயக்குனு துண்டுசீட்டுக்கே நல்லா தெரிஞ்சிட்டுக்கு


RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 13:18

அதனாலதான் பெண்களை கூல் பண்ணி ஒட்டு வாங்குறோம். கூடவே ஓசி ன்னு திட்டுறோம்.. திட்டுவதை மனசுல வெச்சுக்காம ஓட்டுப் போடுங்க லேடீஸ் ...... ப்ளீஜ் ......


K.SANTHANAM
ஜன 06, 2025 13:09

ஓட்டுக்காக பணம் கொடுப்பவர்களை கண்டு பிடித்து அந்த கட்சியினரை தகுதி நீக்கம் செய்ய தைரியம் உண்டா.. இது வரை நடைபெற்ற தேர்தல் போது கைப்பற்றப்பட்ட பணத்திற்காக யாருக்காவது தண்டனை கொடுத்துள்ளீர்களா.. எதற்காக தேவையில்லாத எலெக்சன்?


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 13:25

லஞ்சத்தை legitimate செய்து 11000 கோடி கமிஷன் வாங்கிய கட்சி எல்லாம் பேச கூடாது


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 12:46

மகளிர் உரிமை தொகை , புதுமை பெண் , விடியல் பெண்கள் பயணம் , பெண் முதியோர் திட்டம் , இவர்கள் அனைவரும் மேலே கூறியது கிடைக்கணும் என்றால் என்ன செய்வார்கள் DMK அமோக வெற்றி தான்


Ramesh Sargam
ஜன 06, 2025 12:42

ஆண்கள், பெண்கள், அரவாணிகள் இவர்களை விட போலி வாக்காளர்களே தமிழகத்தில் அதிகம்.


karthik
ஜன 06, 2025 12:06

ஐயையோ அவளுங்க பாதி ஓசி பஸ் டிக்கெட்டுக்கும் 1000 ரூபாய் காசுக்கும், மீதி நடிகனுக்கும் ஓட்டு போடுவாளுங்களே... எங்க நாடு உருப்பட..


ஆரூர் ரங்
ஜன 06, 2025 11:57

ஆனால் அன்றாடம் பெண்ணுரிமை பேசும் கட்சிகள் கூட பெண்களுக்கு 10 சதவீதத்துக்கு மேல் MP MLA சீட் தருவதில்லை. ஆனால் பெண்களைப் பற்றிய அருவருப்பு கருத்துக்கள் ஆபாசப் பேச்சுக்கள், துகிலுரித்த வக்கிர அமைச்சர்களுக்கு பெண்களே வாக்களிக்கும் அவலம்.


முக்கிய வீடியோ