உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி. எனது வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்தில், எனது நாற்காலியின் பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருக்கிறது. யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருக்கிறோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hmysro4x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0https://www.youtube.com/embed/RSOSCC68Qzkஅந்த ஒட்டு கேட்கும் கருவி வெளிநாட்டு கருவி. அது லண்டனில் இருந்து வந்தது. அதனை கண்டுபிடித்து எடுத்து பார்த்தோம். லண்டனில் இருந்து வந்து இருக்கிறது. அது சாதாரண விலை கிடையாது. அதிகமான விலை உள்ள ஒரு கருவி. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramesh Sargam
ஜூலை 11, 2025 20:57

குடும்பமா அது? அரசியலுக்காக இப்படி தந்தையும், மகனும் அடித்துக்கொள்கிறார்கள்.


V K
ஜூலை 11, 2025 18:01

போக போக தெரியும் முற்றிவிட்டதா இல்லையா


panneer selvam
ஜூலை 11, 2025 17:59

Where is that eavesping machine ?? Do not make sensational accusation just to get media attention . At your age , it wont look nice


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2025 17:40

ஒட்டு கேட்கும் கருவியா அல்லது ஓட்டு கேட்கும் கருவியா ?


venugopal s
ஜூலை 11, 2025 17:35

உங்கள் கட்சி விவகாரம் தான் நாறிப்போய் நடுத்தெருவில் கிடக்கிறதே, இதற்கு மேலும் உங்கள் விவகாரத்தை ஒட்டுக் கேட்க வேறு வேண்டுமா?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 11, 2025 15:51

இது அந்நிய நாடுகளின் சதி ..உலக தலைவர்களில் ஒருவரான டாக்டர் ராமதாஸின் ஒட்டுக்கேட்கும் கருவியை பொருத்தியது சர்வதேச கைவரிசையாக இருக்கலாம் ..என்று வல்லுநர்கள் கூறுகிறர்கள் .. டாக்டர் ராமதாஸ் தினமும் விளாதிமீர் புடினிடம் பேசுவார் .. ரஷ்யாவின் பொருளாதரத்தை உயர்த்துவது பற்றி ஆலோசனை சொல்வார் .. சீன அதிபருக்கு அரசியல் ஆலோசனை கூறுவார் .. இந்த செய்தியை கேட்டு சீன அதிபர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்கிறார் .. டாக்டர் ராமதாசுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக போனில் தெரிவித்தார் .. இந்திய அரசும் தைலாபுரம் தோட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த போகிறது .. துணை ராவணுவப்படை தைலாபுரத்திற்கு பாதுகாப்புக்காக விரைகிறது .. பிபிசி யின் இன்றய தலைப்பு செய்தியே ஒட்டுக்கேட்கும் கருவியை பற்றித்தான் ..ஐநா பாதுகாப்பு குழு இதுபற்றி விவாதித்துக்கொண்டு இருக்கிறது ...


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூலை 11, 2025 19:53

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோபமாக இருக்கிறது உங்களுக்கு தெரியுமா? அவரிடம் ராமதாஸ் பேசுவது பற்றி ஏன் எழுதவில்லை?


pv, முத்தூர்
ஜூலை 11, 2025 15:41

அட Airpod பெரியவரே அது


Palanisamy Sekar
ஜூலை 11, 2025 15:40

திமுக பக்கம் போவதற்கு என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்துவிடுறார் பாருங்க. வயதான காலத்தில் இப்படிப்பட்ட பேராசையை வளர்த்துக்கொண்டால் மகனையும் பிடிக்காது மருமகளையும் பிடிக்காது. இவரு ஹாலிவுட் படங்களை அதிகமா பார்த்து அதே கற்பனையில் இருக்கின்றார் போலும். இவ்வளவு கேவலம் பேசியும் கூட தந்தையை பற்றிய விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தும் அமைதி காத்திடும் அன்புமணி போற்றுதலுக்கு உரியவர்தான். நிச்சயமாக. தந்தைக்கு மகன் செய்திடும் கடமை அது.


Rengaraj
ஜூலை 11, 2025 15:23

கொஞ்ச நாட்களாக பிதற்ற ஆரம்பித்துவிட்டார். நிலைமை தற்போது முற்றி விட்டது..


mohana sundaram
ஜூலை 11, 2025 15:19

ஏன் அதை எடுத்து காண்பிக்க கூடாதா,? ஐயா பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை