உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள் இறக்குவது குறித்து தமிழக சட்டசபையில் விறுவிறு விவாதம்!

கள் இறக்குவது குறித்து தமிழக சட்டசபையில் விறுவிறு விவாதம்!

சென்னை: பனைமரத்தில் இருந்து கள் இறக்குவது குறித்து சட்டப்பேரவையில் விறுவிறுப்பான விவாதம் நடந்தது. அதன் விபரம் பின்வருமாறு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன்: நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க வேண்டும். கள் மீதான தடையை நீக்கி கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும். சர்க்கரையை ரேஷன் கடையில் விற்பனை செய்வது போல், கருப்பட்டியை விற்பனை செய்ய வேண்டும்.

அமைச்சர் பதில்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பனை தொழல் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. குறிப்பாக பனை என்பது எல்லா மாவட்டங்களிலும் இல்லை. அமைச்சரின் கோரிக்கை வருங்காலத்தில் பரீசிலனை செய்யப்படும்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன்: பனையிலிருந்து கள் இறக்குவது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. கள்ளுக்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். கள் மீதான தடையை அரசு நீக்குமா என்று அமைச்சரின் பதிலை சபாநாயகர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் பொன்முடி

பனையிலிருந்து பதநீர் இறக்கும் போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால் போதை பொருளாக மாறிவிடும் என்பது உறுப்பினர் அவர்களுக்கு தெரியும். அது எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு தான் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது எல்லாம் கிடைக்கிறது என அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டு இருந்தார்.

சபாநாயகர் அப்பாவு

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பனையில் இருந்து இறக்கும் போது கள் ஆகாது; அது பதநீர் தான்.. அதற்குதான் அனுமதி கேட்கப்படுகிறது என்றார். பின்னர் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: ஒரு காலத்தில் பனங்கள், தென்னங்கள் மரத்தில் இருந்து இறக்கப்பட்டன; அப்போது தடை கிடையாது; கள் குடிக்க அனுமதி இருந்தது. ஆனால் அந்த பானங்களை போதைப் பொருளாகவும் மாற்ற சில பொருட்கள் கலந்தனர். பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதல்வர் எதிர்காலத்தில் பரிசிலீப்பார்.இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய, எம்.எல்.ஏ., அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இதனால் கள் என்று வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு, வழக்குபோடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சர் பொன்முடி: கைது செய்பவர்கள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். சபாநாயகர் கள் குறித்து பேசுவதை பார்த்தாலே இதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என தெரிகிறது. அவர்கள் வசிக்கும் பகுதியில் அதிக பனை மரங்கள் இருக்கிறது. இது குறித்து முதுல்வர் ஸ்டாலின் இடம் கலந்து பேசி முடிவு எடுப்போம்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

எவர்கிங்
மார் 25, 2025 18:48

இந்த நரை முடியின் பதவி பறிப்பு வழக்கு அம்போதானா?


MUTHU
மார் 25, 2025 18:17

விவசாய நிலங்கள் தரிசு ஆக ஆக பணம் படைத்தவனுக்கு சந்தோசம். விலைமதிப்பற்ற விளை நிலங்கள் விலைக்கு வருமல்லவா. அதற்காகவே கள்ளு இறக்க விட மாட்டார்கள்.


சந்திரசேகர்
மார் 25, 2025 18:05

ஆக டாஸ்மாக்ல குடிச்சா தப்பு இல்லை.போதை ஏறாது.பனங்கல் தென்னங்கல் குடிச்சா போதை ஏறிடும்.ஆனாலும் இந்த அறிவாறிகளுக்கு ஓட்டு போடும் மக்கள் எப்பேர்ப்பட்ட வர்கள் என்று நினைக்கும் போது கோமாளிகளாக தெரிகிறார்கள்


R.P.Anand
மார் 25, 2025 17:39

டாஸ்மாக் ல இவர் என்ன செஞ்சஆனோ அதே தான் எடப்பாடி ஆட்சியும் செய்தது.


விவசாயி
மார் 25, 2025 15:45

பொன்முடியாருக்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? பதநீரில் கலக்க வேண்டியதை கலந்து போதை பொருளாக மாற்றி விட்ருவீடுவார்களாம்! Tasmac ல் நாங்கள் சத்து டானிக் தான் விற்கிறோம் என்று சொல்ல வருகிறாராம்! இன்னும் எத்தனை நாளுக்கு தமிழர்களை ஏமாற்றுவீர்கள், இலங்கையில் பணங்கள் அரசே விற்பனை செய்கிறது ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் தடைசெய்கிறார்கள், இதற்கு விளக்கங்கள் வேறு : விளங்கிடும்


Balasubramanian
மார் 25, 2025 15:01

காலம் கலி காலம் ஏறத் தாழ நூறு ஆண்டுகள் முன் கள்ளுக் கடை முன்பு மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் இன்று அதைத் தேவை என்கிறது! இந்தி பிரசார சபை ஆரம்பித்து ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர் களையும் விரட்டிய கட்சி இன்று சுதந்திர தினத்தை துக்க தினமாக கொண்டாடிய பெரியாரைப் போற்றும் கட்சியுடன் கை கோர்த்து உள்ளனர்


Manalan
மார் 25, 2025 14:32

நல்ல சாராயம் TASMAC விற்பனை குறைந்துவிடும்.


Samy Chinnathambi
மார் 25, 2025 14:21

கள் இறக்க அனுமதித்தால் முதலில் பாதிக்கப்படுவது ஜெகத்ரட்சகன், பாலு, கனிமொழி, துன்பநிதி, மற்றும் மாப்பிள்ளை.. இதனால் விவாதம் வெட்டி விவாதம்.. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டு , கள் லிட்டருக்கு முப்பது ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதில் வரியாக ஐந்து ரூபாய் அரசிற்கு வருமானமாக எடுத்து கொள்ளப்படும்.. விவசாயியும் பலன் அடைவார்கள் அரசிற்கும் வருமானம் கிடைக்கும்.. பொதுமக்களும் குடல் வேண்டு கல்லீரல் கெட்டு சாக மாட்டார்கள். இப்போது அனுமதித்தால் ஒரு குடும்பத்தின் வருமானம் பாதிக்கப்படும்..


M R Radha
மார் 25, 2025 16:21

அதை அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது ஏன் செய்யவில்லை?


தமிழ்வேள்
மார் 25, 2025 20:01

ராதா மேடம், அவர்கள் மிடாஸ் யாவாரம் பாதிக்கும் என்பதால் அவர்களும் கள் இறக்க அனுமதிக்கவில்லை.


Ramesh Sargam
மார் 25, 2025 14:17

இதிலும் ஊழல் செய்வார்கள் திமுகவினர்.


S.V.Srinivasan
மார் 25, 2025 14:10

அப்புறம் உங்க திராவிட மாடல் சாராய ஆலய முதலாளிகள் பொழைப்புல மண் விழுந்துடுமே கோல்ட் ஹேர் அவர்களே.


ranganathan ramesh
மார் 25, 2025 21:21

Correct


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை