உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் விரல் ரேகை பதிவு செய்ய காலக்கெடு இல்லை  

ரேஷனில் விரல் ரேகை பதிவு செய்ய காலக்கெடு இல்லை  

சென்னை:தமிழகத்தில், 93 லட்சம் முன்னுரிமை, 18.45 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில், 3.65 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். முன்னுரிமை கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், தலா 5 கிலோ அரிசி; அந்தியோதயா பிரிவுக்கு தலா 35 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்படுகிறது. சில கார்டுதாரர்கள், உயிரிழந்த உறுப்பினரின் பெயரை, கார்டில் இருந்து நீக்காமல் உள்ளனர். அவர்களுக்கான பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. இந்த முறைகேடை தடுக்க, முன்னுரிமை, அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், ரேஷன் கடை விற்பனை முனைய கருவியில், விரல் ரேகை பதிவு செய்து, 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யுமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிக்கு ஜூன் 30 வரை, அவகாசம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இன்னும், 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. அவர்களின் ரேஷன் கார்டு செல்லாது என, தகவல் பரவியது. இதை அரசு மறுத்துள்ளது. இது குறித்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கையில், 'அந்தியோதயா, முன்னுரிமை கார்டுதாரர்கள் கட்டாயமாக, அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்; அதற்கு கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை' என, தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி