உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசில் மக்கள் பணி இல்லை: ராஜிவ் படுகொலை சம்பவத்தில் உயிர் தப்பிய அனுசுயா த.வெ.க.,வில் ஐக்கியம்

காங்கிரசில் மக்கள் பணி இல்லை: ராஜிவ் படுகொலை சம்பவத்தில் உயிர் தப்பிய அனுசுயா த.வெ.க.,வில் ஐக்கியம்

சென்னை: '' காங்கிரசில் கட்சிப் பணி நடக்கிறதே தவிர, மக்கள் பணி நடக்கவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவாத தி.மு.க.,வை தட்டிக் கேட்கவில்லை,'' என காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் கூடுதல் எஸ்.பி., அனுசியா டெய்சி கூறினார்.கடந்த, 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர, போலீஸ் அதிகாரிகள் பலர், பலத்த காயம் அடைந்து செயல்பட முடியாமல் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் தமிழக போலீசில் கூடுதல் எஸ்.பி.,யாக இருந்து ஓய்வு பெற்ற அனுசுயா டெய்சி. அவர் தனது பணி ஓய்வுக்கு பின், ராஜிவ் கொலையாளிகளுக்கு துாக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார்.இந்நிலையில் இன்று அவர் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.,வில் இணைந்தார். இதன் பிறகு அனுசியா டெய்சி கூறியதாவது: தமிழக மக்களுக்கு ஜாதி, சமயம் அற்ற ஒரு சமத்துவமான அரசை கொடுப்பேன். ஊழல் அற்ற அரசை கொடுப்பேன். மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்களுக்காக எனக்கு பெரிய சம்பளம் அளிக்கும் சினிமா தொழிலை விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்துள்ளேன் என விஜய் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அரசியலில் வெற்றிடம் உள்ளது. அரசியலில் இருப்பவர்கள் மன்னராட்சியாகவும், ஊழல்வாதியாகவும் இருக்கிறார்கள். அவர்களை அகற்றிவிட்டு, இறுதிக்காலம் வரை உழைப்பேன் எனவும் உறுதிமொழி எடுத்துள்ளார்.மக்களை பார்க்க ஆட்சியாளர்கள் இல்லை என்ற ஒரு வெற்றிடத்தை நிரப்ப விஜய் வந்துள்ளார். மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என அவர் நினைப்பது போல் நானும் நினைக்கிறேன். மக்கள் சந்தோசமாக வாழ நல்லாட்சி கொடுக்கும் தலைவருடன் நானும் இருக்கிறேன்.மக்கள் பணி இல்லைகாங்கிரசில் கட்சி பணி நடக்கிறது. ஆனால், மக்கள் பணி இல்லை. மத்திய அரசு செய்வது சரி, தவறு என காங்கிரஸ் சுட்டிக்காட்டுகிறதே தவிர, மக்கள் பணி செய்யவில்லை. தி.மு.க., உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து உள்ளது. தி.முஉக., வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், காங்கிரஸ் அதனை கேட்கவில்லை. அதனால், மக்கள் பணி குறைவாக உள்ளதால் காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்க விருப்பமில்லை. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் விஜயை நம்புகின்றனர். அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. ஒரு நல்ல ஆட்சியாளர்களாக இல்ல. மக்களுக்கு தேவையானதை கொடுக்கவில்லை என்ற வெறுப்புடன் உள்ளனர். அவர்கள் நம்புவது எல்லாம் விஜயை மட்டும் தான். விஜய் வந்துதான் நல்லாட்சி கொடுக்கப் போகிறார் என மக்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் இன்னும் வளர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Chinnamanibalan
பிப் 27, 2025 16:41

அரசு நிர்வாகத்தில் கமிஷன், கரப்ஷன், கலைக்ஷனை ஒழித்துக் கட்டுவதே தனது முதல் வேலை என்று தவெக தலைவர் விஜய் கூற முன்வருவாரா?


Karthik
பிப் 27, 2025 12:00

இந்தம்மா கடைசி காலத்துல கரைசேராத படகுலயா போயி ஏறனும்?? அய்யோ பாவம்


Uuu
பிப் 27, 2025 11:00

இப்போ போகிற கட்சி அப்படியே அறுத்து தல்லிட்டலும்


ப.சாமி
பிப் 27, 2025 09:19

மக்கள் பணி செய்தால்தான் ஊழல் செய்ய இயலும்..


kulandai kannan
பிப் 27, 2025 08:40

இது போன்ற செய்திகளுக்கு திமுகதான் கவலைப்பட வேண்டும்.


sridhar
பிப் 27, 2025 07:54

சம்பவம் நடந்து முப்பது வருஷமா புலம்பிக்கொண்டே காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்தார் . சந்தர்பம் கிடைத்தவுடன் தன் மதம் சார்ந்தவர் கட்சிக்கு கிளம்பிவிட்டார் .


Kasimani Baskaran
பிப் 27, 2025 07:27

தீவிரவாதிகள் மீது கூட அன்பு காட்டும் முதல்வர் இருக்கும் பொழுது இவர் போன்றவர்கள் கண்டிப்பாக காங்கிரசில் இருக்க முடியாது


Naga Subramanian
பிப் 27, 2025 06:18

காங்கிரஸில் இருந்து என்ன சாதித்தாரோ அதையே அங்கும் சாதிப்பார். அதவாது, வாழ்நாள் முழுதும், முப்பத்து நான்கு வருடத்திற்கு முன்பு வெடிகுண்டு விபத்தில் தனது கை ஊனமானது குறித்தே பேசிக்கொண்டு மட்டுமே இருப்பார்.


Seekayyes
பிப் 27, 2025 06:02

அனுசுயா "டெய்ஸி" "ஜோசப்"விஜயின் மதசார்பற்ற தவெகவில் இணைந்தார். சூப்பர்.


Krishna Gurumoorthy
பிப் 27, 2025 01:43

டெய்சி அல்லேலூயா வில் ஐக்கியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை