உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறியாமையில் பேசுகிறார்கள்: விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

அறியாமையில் பேசுகிறார்கள்: விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

காஞ்சிபுரம் : '' சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள், பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள், '' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், '' எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எப்படி இருக்கிறது என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?'' எனப் பேசியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tqptowni&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அறியாமை

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் இபிஎஸ் பேசியதாவது: யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள், பாவம் அறியாமையில் பேசுகிறார்கள்.இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிவருகிறார்கள். மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது.அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என நிறைய கல்லூரிகளை துவக்கினோம்.

புரிந்துகொவீர்கள்

அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். 1976 முதல் உழைப்பால் உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம். இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.ஆனால் அவர்கள் சாதித்தது என்ன? எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்ஜிஆர், அண்ணாதுரை, ஜெயலலலிதா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பைப் பெற்றபின்னர்தான் முதல்வராக வர முடிந்தது.மற்றவர்களைப் போல திரைப்படங்களில் நடித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலை கிடையாது. ஒரு திரைப்படத்தில் நடித்தவுடனே ஹூரோ ஆகமுடியாது, பல படத்தில் நடித்த பிறகே ஸ்டார் ஆக முடியும். சினிமாவிலே அப்படி என்றால் அரசியலில் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

ஊழல்

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: “சில பேர் புதிதாக கட்சியைத் தொடங்கி இரண்டாவது மாநாடுதான் நடத்தியிருக்காங்க, அது ஒன்றரை வயதுக் குழந்தை. இது, அதிமுக எழுச்சி பயணத்தில் 105வது கூட்டம். இதுவே மாநாடு போல் காட்சியளிக்கிறது. இரண்டு மாநாட்டுக்கே இப்படி என்றால், ஜூலை 7ம் தேதி தொடங்கி 105 எழுச்சி மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். அதிமுக அத்தனை மக்கள் செல்வாக்குள்ள இயக்கம். எனவே, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். நாங்கள் மக்களை சந்திக்கிறோம் என்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா நாட்டை ஆண்டார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆண்டோம். இப்படி 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சி புரிந்திருக்கிறது.இன்னும் ஒருமுறை கூட எம்.எல்.ஏ ஆகவில்லை, ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைபடுவது தவறல்ல. இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமலே பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

கூத்தாடி வாக்கியம்
ஆக 22, 2025 11:35

அறியாமை என்பதை அறை குறை என்று அழைக்கலாமா ஆபீசர்


Durai Kuppusami
ஆக 22, 2025 08:27

இனிமேல் நீ ட்ரோல்தான்......


Durai Kuppusami
ஆக 22, 2025 07:36

தலைவர் படம் அவர் பாடல் இதெல்லாம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கு..அவர் கால் தூசிக்கு இணையாக மாட்டாய் நேற்று வந்தவன் நீ எவ்வளவோ இன்னல்கள் வந்தது அதை எல்லாம் கடந்து மக்கள் ஆதரவுடன் வெற்றி இலக்கை தொட்டவர் என் தலைவன் அவரை பற்றி பேசவோ அவர் பாடலை பாடவோ உனக்கு துளியும் அருகதை இல்லை நீயே 6 மணிக்கு மேல் பேசமாட்டாய் அதுவும்கூட தெரியும் பேச்சில் நிதானம் தேவை அது உன் கிட்ட சுத்தமா இல்லை நீயெல்லாம் மற்ற கட்சி பேசாத.......


pakalavan
ஆக 22, 2025 01:02

எடப்பாடி வரும்போது கூட்டம் கூட்டிவதற்க்கு 150 ரூபாய் கொடுத்து தான் ஆட்களை கூட்டி வந்தார்கள், இல்லாட்டி இந்த அடிமையைப்பாக்க யாரு வருவாங்க ?


pakalavan
ஆக 21, 2025 22:00

எடப்பாடி இனிமேலு சாதிகட்சி நடத்துங்க


SENTHILKUMAR
ஆக 21, 2025 21:45

3 ஆம் இடத்திற்கு தான் போட்டி அதுவும் நாம் தமிழர் vs TVK


Thiagarajan
ஆக 21, 2025 21:05

Well said EPS. Joseph Vijay is in day dream.. What happened to MNM he should know :


முருகன்
ஆக 21, 2025 21:05

நீங்கள் இருவரும் எப்போது நேரடியாக விமர்சனம் செய்வீர்கள் உங்கள் கூட்டாளி பிஜேபி யை கடுமையாக விமர்சனம் செய்தும் அமைதியாக இருப்பது ஏன் இரட்டை வேடம் நெடுநாள் நீடிக்காது


Rameshmoorthy
ஆக 21, 2025 21:04

Joseph Vijay will Burn his hand soon


Oviya Vijay
ஆக 21, 2025 20:53

2026 தேர்தல் முடிந்ததும் மீடியாக்களின் வாயில் கிடைக்கப் போகும் அவல் என்னவென்றால்... அதிமுகவின் அதல பாதாள வீழ்ச்சியும், தவெகவின் மலைக்க வைக்கும் எழுச்சியும்... இது கண்டிப்பாக நடக்கும்... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... ஆட்டுக்குட்டி நிருபர்களிடம் பலமுறை எழுதி வெச்சுக்கோங்க என கூறிய ஒன்று கூட இதுவரை நடந்ததில்லை... ஆனால் நான் கூறியது நடக்கும்... பிளவு பட்டுக் கிடக்கும் அதிமுக தொண்டர்கள் உண்மையில் மனதளவில் சலிப்படைந்து கிடக்கின்றனர் என்பதே உண்மை... அவர்களில் பெரும்பாலானோரின் ஓட்டுக்கள் தவெகவிற்கு செல்லப் போகிறது... அதனால் தான் விஜய் அதிமுக தொண்டர்களின் மேல் கரிசனம் காட்டுகிறார்... அதிமுக ஓட்டுக்கள் இம்முறை பாதை மாறி தவெகவிற்கு செல்லப் போகிறது என்பதே உண்மை... இச்சூழ்நிலையில் விவாதிக்கவே தேவையில்லாத கட்சிகள் என்றால் அது பாஜக, நாதக, தேமுதிக, பாமக, தமாகா... மீண்டு எழ வாய்ப்பில்லாத கட்சிகள் இவை...


தொளபதி
ஆக 21, 2025 21:27

அதிமுக 150 சீட்டுகளுக்கு மேல் பிடித்து ஆட்சி. தாவெக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு.


vivek
ஆக 21, 2025 22:25

உன்னை யாரும் சீண்டலை...போன வாரம் தான் 10-15 பேர் கிட்ட வாங்கி கட்டிக்கிட்ட...எதுக்கு பில்டப் ஓவியரே


Kadaparai Mani
ஆக 21, 2025 22:48

அதிமுக கூட்டம் புரட்சி தலைவர் அவர்களுக்கு கூடும் கூட்டம் எடப்பாடி அவர்களுக்கு கூடுகிறது அதுவும் திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் .105 தொகுதி எடப்பாடி பிரச்சாரம் .விஜய் அதை அடுத்த பிறவியில் தான் செய்ய முடியும்


பேசும் தமிழன்
ஆக 22, 2025 07:50

திடிரென்று திமுகவை விட்டு விட்டு... TVK கட்சிக்கு முட்டு கொடுப்பது ஏன்.... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி வந்து சேரவில்லையா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை