உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒன்னும் இல்லைன்னு எழுதிக்கொடுத்துட்டு போயிட்டாங்க; அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துரைமுருகன்!

ஒன்னும் இல்லைன்னு எழுதிக்கொடுத்துட்டு போயிட்டாங்க; அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துரைமுருகன்!

சென்னை; 'ஒன்னும் இல்லை என்று எழுதி கொடுத்துவிட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று விட்டார்கள்' என அமைச்சர் துரைமுருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.வேலுாரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் எம்.பி., கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று (ஜன., 03) சோதனை நடத்தினர். முன்னதாக, கதிர் ஆனந்த், துபாய் சென்றுள்ளதாலும், அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்ததாலும் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அதிகாரிகள் காலை, 7:00 முதல், மதியம், 2:18 மணி வரை வீட்டின் வெளியே காத்திருந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகே, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்நிலையில், இன்று (ஜன., 04) தன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, காரில் இருந்த படியே, அமைச்சர் துரைமுருகன், 'வந்தாங்க, ஒன்னும் இல்லைன்னு எழுதிக்கொடுத்துட்டு போயிட்டாங்க' என பதில் அளித்து விட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Aravind
ஜன 10, 2025 17:21

கடமை வீரர் காமராசர் போலவும், தன்னை அப்பழக்கற்ற கரைபடாத கரங்களுக்கு சொந்தக்காரன் போல, சத்தியம் தவறாத உத்தமர் தான் உத்தமசீலன் முருகன் என்ற உண்மையான பெயர் கொண்ட துரைமுருகன்., துரைபோல வாழும் தியாகசீலன்


kasi Nagarajan
ஜன 08, 2025 18:27

ரெய்டு வரும் என்று துரைமுருகனுக்கு முன்னமேயே தெரியும் - எம்.பி.க்கள் பாலு , ராசா , கனிமொழி போன்றவர்கள் அமித் ஷா காலில் அடிக்கடி விழுவார்கள் தங்களைக் காப்பாற்றும்படி மன்றாடுவார்கள் - அதன்படி அமித் ஷா முன்கூட்டியே ரெய்டு தேதியைச் சொல்லி விடுவார் இவர்களும் மறைக்க வேண்டிய ஆவணங்கள்/கரன்சி நோட்டுக்களை பத்திரப் படுத்தி விடுவார்கள் தமிழ் நாட்டு ரெய்டுகள் எல்லாமே வெறும் கண்துடைப்புதான் டெல்லி திமுக வை தண்டிக்காது - எல்லாமே நாடகந்தான் - இந்த தைரியத்தில்தான் திமுக இன்று பேயாட்டம் ஆடுகிறது கேட்பாரில்லை -


NATARAJAN R
ஜன 07, 2025 19:12

அமைச்சரே அவர்கள் எதுவும் எடுக்கவில்லை என்று பேட்டி தருகிறீர்கள். நன்று. அப்படி என்றால் நீங்கள் டெல்லிக்கு ஏன் விமானத்தில் பறந்தீர்கள்? நீங்கள் சட்ட மன்ற உறுப்பினர். அவர்கள் வெளியேறிய அடுத்த நிமிடம் அவர்களை தொடர்ந்து டெல்லிக்கு பறந்த ரகசியம் என்னவோ?


Tetra
ஜன 06, 2025 12:42

இருக்கும்


Aravind
ஜன 05, 2025 21:40

எம். ஜி. ஆர் உதவியால் கல்வி கற்று, கருணாநிதியிடம்ம் ஊழல் செய்ய பயிற்சி பெற்றவர். வருமானத் துறை, மற்றும் அமலாகத் துறையிடம் தி. மு. க வினர் கொடுத்த தகவலால் மாட்டிக் கொண்டு மிக உத்தமர் போல நடிக்கிறார். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்


kumarkv
ஜன 05, 2025 19:12

அவர்கள் எடுத்துகொண்டு பொனபிறகு ஒன்னும் இல்லை என்று நீயே எழதிக்கோ.


Shankaran Krishnan
ஜன 05, 2025 15:44

பிறகு ஏன் இவர் டெல்லி செல்கிறார் என்னமோ நடக்குது திமுக மேலிடம் இவரை காப்பாற்றாது கொஞ்ச நஞ்ச கொள்ளையா அடித்துள்ளார் மணல் மாபியா மந்திரி


Suresh Sivakumar
ஜன 05, 2025 13:46

Bloody scums. Dont they know how to stash the wealth.


Esan
ஜன 05, 2025 11:21

இன்னும் எடுப்பதற்கு ஒன்றும் அனைத்தையும் எடுத்த பிறகு இல்லை என்பதைத் தப்பாகப் புரிந்து கொண்டிருப்பார் போல


சாண்டில்யன்
ஜன 05, 2025 09:46

வெள்ளிக்கிழமை ராமசாமியிடம் காகட்டவேண்டியதை காகட்டி பெறவேண்டியதை பெறுவார். பன்னாட்டு ஹவாலா பேர்வழிகள் என்றும் எங்கேயும் வாக்கு தவறாதவர்கள் கணக்கு கரெக்ட்டா செட்டில் செய்வார்கள் சுணங்கினால் சுத்தம்


சமீபத்திய செய்தி