உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு கேள்வி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு கேள்வி

சென்னை: திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம், சரித்திர ஆவணங்கள் படி பார்த்தால், 350 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்றப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மேலே உள்ள மலை உச்சியில் கொப்பரையில் தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ளுவீர்கள். அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? இது தொடர்பாக வழக்குகள் பல்வேறு கட்டத்தில் நீதிமன்றங்களில் நடந்து இருக்கிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் இந்தாண்டு மாத்திரம் ஒரு கோடி மக்கள் பங்கேற்று இருக்கிறார்கள். திருவண்ணாமலையில் 35 லட்சம் மக்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த அரசை பொறுத்தவரை சட்டத்தை மதிக்கிற அரசு. பக்தர்கள் நலன் காக்கிற அரசு.இவ்வாறு சேகர் பாபு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Madhavan
டிச 07, 2025 09:16

இந்த விவகாரத்தில் கழகங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தாக்கி அறிக்கை விடுகின்றன. இரண்டுக்குமே தந்தை திராவிடக் கழகம்தான். எனவே இவர்களின் பேச்சு அர்த்தமற்றது. நேற்று தி. மு. க. வில் இருந்தவர்கள் இன்று அதிமுகவில் , இன்று அதிமுகவில் இருப்பவர்கள் நேற்று வரை திமுகவில் இருந்தவர்கள்தான். பதவிக்காக கடசி மாறுபவர்கள் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விஷயத்திலும் மாற்றிப் பேசுவது குறித்து ஆச்சரியம் இல்லை. ஆனால் திருப்பரங்குன்றமும் மலையும் தீபத் தூணுமே இன்னமும் மாறாமல் உள்ளன என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். டிசம்பர் நான்காம் தேதி வரை தீபத் தூண் எனக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதனை எல்லைக் கல், நில அளவைக் கல், சர்வே கல் எனவெல்லாம் சொல்ல ஆரம்பித்ததுள்ளார்கள். புகைப்படத்தில் பார்க்கும்போதே அது கோவில் சம்பந்தப்பட்ட, கோவில் வேலைப்பாடுடன் பீடத்துடன் கூடிய ஒரு ஸ்தம்பமாகத்தான் தெரிகிறது. திருப்பரங்குன்றம் மலையே ஒரு பெரிய கல்லாக இருக்குபோது அதன் மேல் ஒரு நில அளவை கல் இருக்க வாய்ப்பில்லை. இது தீபத் தூணாகத்தான் இருந்திருக்க வேண்டும். தீபத் தூண் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றிக் கொண்டேயிருப்பது அரசியல்வாதிகள்தான்.


கூத்தாடி வாக்கியம்
டிச 06, 2025 17:16

அண்ணே அது பக்கத்தில் ஒரு உண்டியல்நா கட்டி விட்டலமா


Chandru
டிச 06, 2025 15:34

தைரியமாக சொல் நீ மனிதன்தானா மனிதன்தானா


R.MURALIKRISHNAN
டிச 06, 2025 14:12

உனக்கும் தமிழினத்திற்கும் என்ன சம்பந்தம். எங்களுக்கு கெட்ட மானங்கெட்ட திராவிட மாடல் வேண்டாம்


Venugopal, S
டிச 06, 2025 13:26

நாத்திக கட்சியின் அமைச்சர். கோவிலில் என்ன சம்பந்தம்?


Ramesh Sargam
டிச 06, 2025 13:05

கார்த்திகை தீபம் ஒரு ஹிந்துக்களின் பண்டிகை. வீட்டிலும், கோவிலிலும் பல இடங்களில் தீபம் ஏற்றி வழிபடுவோம். அதை கேட்க நீ யார்? உங்கள் முதல்வரின் அப்பா ஒரு கல்யாணத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். எதற்கு மூன்று கல்யாணம் செய்து கொண்டார்? அவரை நீங்கள் கேள்வி கேட்கமுடியுமா?


Sridhar
டிச 06, 2025 12:50

சட்டப்படி அறநிலைய துறை கணக்குப் பிள்ளை. அத்தையை சரியாக செய்யவில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது? பூஜை விவகாரத்தில் அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்ய உரிமை இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாக்க வில்லை என்று குற்ற சாட்டும் உள்ளன.


Velayutham rajeswaran
டிச 06, 2025 11:23

தீபம் ஏற்ற வேண்டிய இடத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் ஏற்றவில்லை என்பதே கேள்வி அமைச்சர் மடைமாற்றக்கூடாது


sankar
டிச 06, 2025 11:22

நலம் காக்கும் லட்சணம் இதுதானா சார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை