உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தென் தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இது தென் தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கப்பல் கட்டும் தளம் தென் தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.துாத்துக்குடி மாவட்டத்தில், 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு வணிக கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்காக, இரண்டு நிறுவனங்களுடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை, இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன.தென் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும். கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை சங்கப்பாடல்கள் சொல்லும். உலக கப்பல் கட்டும் வரைபடத்தில் தென்தமிழகத்தில் திமுக அரசு இடம் பெறச் செய்கிறது. இதன் வாயிலாக வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உருவாக்குகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

vbs manian
செப் 21, 2025 21:06

புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகத்துக்கு திறவு கோல்.


vbs manian
செப் 21, 2025 21:05

ஸ்டெர்லிட் விரட்டி அடித்ததுக்கு பிராயச்சித்தம். இதில் சங்க காலம் தமிழர் கலை எங்கு வந்தது. மஸ்கன் டாக் மகாராஷ்டிரா. கொச்சி ஷிப்பிங் கார்பொரேஷன் கேரளா. எப்படியெல்லாம் திரிக்கிறார்கள்


சிட்டுக்குருவி
செப் 21, 2025 20:37

தாமிர தொழிசாலையை திறக்கவேண்டுமென்றால் அதற்கு ஒரு வழியுண்டு. அந்த தொழிற்சாலைக்கு "மாண்புமிகு முத்தமிழ் அறிஞ்சர் கலைஞர் நூற்றாண்டு தாமிரதொழிற்சாலை"என்று பெயரிடுங்கள் .அப்புறம் பாருங்கள் .தொழிற்சாலை தானாக இயங்கும் .முடிந்தால் ஒரு சிலையையும் தொழிற்சாலை முன்வாசலில் வையுங்கள் .


N S
செப் 21, 2025 20:28

மக்களே மறந்து விடாதீர்கள், அப்பாவின் சகோதரியின் இடம். இருந்த ஸ்டெரலைட் ஆலையை மூடி விட்டோம். மத்திய அரசின் முயற்சிக்கு நம்மவரின் "ஸ்டிக்கர்". 55000 பேருக்கு வசதி செய்து தர "குடும்பம்" தயாராக உள்ளது. உரம் விநியோகம் போல, வட்டம் சட்டம் எல்லாம் பசியுடன் காத்திருக்கிறார்கள். கடவுளே, அடித்தளம் நன்றாக அமைய வேண்டும்.


sankaranarayanan
செப் 21, 2025 19:04

சென்னை சேலம் எட்டுவழி சாலையைப்போன்று இதற்கும் எதிர்ப்புத்தெரிவித்து கைகழுவி விட்டு விடாதீர்கள் பிறகு வருந்தி பயனில்லை எல்லாமே மோடி அய்யாவின் முயற்சிதான்


R.Kalyanasundaram
செப் 21, 2025 18:49

நாட்டுக்கு தேவையான தாமிர தொழிற்சாலையை மூடி மாவட்ட மக்களின் வேலையை தொலைத்த இந்தரசு கப்பல் கட்ட கையெழுத்து இட்டிருக்கிறது. வந்த பின் வேலைவாய்ப்பை பற்றி பேசட்டும்


Sivaram
செப் 21, 2025 18:13

கொச்சின் ஷிப்யார்ட் ,மேசகோன் டாக்யார்ட் இரண்டுமே ஒன்றிய அரசு கண்ட்ரோல் பண்ணுது அப்பா. ஏன் இப்படி தமிழனை ஏமாத்தறே அப்பா


Gokul Krishnan
செப் 21, 2025 18:10

இங்கு கருத்து பதிவிடும் சிலர் தேர்தல் நெருங்குவதால் தி மு க வாய்ஜாலம் என்கின்றனர் . ஏன் பீகாரில் நிதிஷ் குமார் கூட்டணி செய்யவில்லையா அடுத்த மாதம் தேர்தல் வைத்து கொண்டு அம்ரித் பாரத் வந்தே பாரத், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் என்று இப்போது சலுகை மழை பெய்து வருகிறது. நிதிஷ் குமார் மற்றும் பிஜேபி செய்தால் அது சூப்பர் அதை தி மு க செய்தால் உடனே தேர்தல் நெருங்குகிறது என்று விமர்சனம்


N S
செப் 21, 2025 20:38

ஐயா, தமிழகத்தில் கப்பல் துறை அமைச்சர் யார்?


Kjp
செப் 21, 2025 16:21

சங்கப் பாடல்கள் சொல்லும் கப்பல் கலையில் ஆஹா என்ன உங்கள் தமிழ் புலமை. மெய் சிலிர்க்கிறது. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா.


M Ramachandran
செப் 21, 2025 15:18

மக்கள் சொத்தை சுரண்டி தின்பதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை