உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராத காரணம் இதுதான்; சொல்கிறார் சீமான்

ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராத காரணம் இதுதான்; சொல்கிறார் சீமான்

திருச்சி: 'பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டில் மட்டும் ரெய்டு நடத்தாதது ஏன்' என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியாவில் பா.ஜ., ஆளாத மாநிலங்களான ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், டில்லியில் கெஜ்ரிவால், தெலங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் வீடுகளில் எல்லாம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் வீட்டுக்கு ரெய்டு வரவில்லை. அப்படியென்றால், கறைபடியாத, தூய்மையான கையா இது?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m3n8swg7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உங்களுக்குள்ள ஒரு உடன்பாடு இருக்கு. சரியாக கப்பம் கட்டி வருவதால், முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு எல்லாம் ரெய்டு வராது. இது மறைமுக உறவு கிடையாது. நல்ல உறவு, வெளிப்படையான கூட்டணி.பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களையோ, அமைச்சர்களையோ பிரதமர் எளிதாக சந்திக்கிறாரா?. ஆனால், ஒரே நாளில் காலையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். மாலையில் அமைச்சர் உதயநிதியை சந்திக்கிறார். ஏதோ, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த சம்மந்தி போல சந்திக்கிறார். இது மறைமுகமா? நேரடியா?அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கும் போதே, அக்கட்சியின் நிகழ்ச்சிக்கு அழைத்தும் பா.ஜ., வரவில்லை. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இல்லாத போது, கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், அதனை வெளியிடுகிறார். இதன்மூலம், பா.ஜ.,வுடன் யாரு நெருக்கமான கூட்டணியை வைத்துள்ளார் என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு சீமான் கூறினார்.,அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்க எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நீங்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு தான் இருக்கிறது,' என சீமான் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
நவ 18, 2024 20:16

இந்த சீமான் ஒருசில சமயங்களில் சரியாக பேசுகிறார். பல சமயங்களில் உளறுகிறார். பேச்சில் ஒரு ஸ்திர தன்மை இல்லை.


D.Ambujavalli
நவ 18, 2024 17:47

Appointment வாங்க மாப்பிள்ளை ஏற்பாடு செய்வார். கதவை சாத்திவிட்டு சாஷ்டாங்கமாக அப்பா வும பிள்ளையும் காலில் விழுந்து கேஸ்களிலிருந்து மீண்டு வருவார்கள் சுற்றுப்பட்டு தேவதைகள் மட்டும் ரெய்டில் காட்டுவார்கள் இவர்கள் முதலைக்கண்ணீர் விடுவார்கள்


வைகுண்டேஸ்வரன்
நவ 18, 2024 17:35

திமுக வின் ஓட்டுகளைக் குறைக்க இது ஒரு வழி. பாஜக வுடன் உறவு, கூட்டணி என்று சொன்னாலே, அப்படி சொல்லப்படுகிறவர்களுக்கு தமிழ் நாட்டில் ஓட்டு விழாது என்பதால் இப்படி கிளப்பி விடுகிறார்கள்.


TAMILAN
நவ 18, 2024 17:02

உண்மையை உ டைத்தார் . பிஜேபி- சம்பந்தி D.M.K


ராஜா
நவ 18, 2024 16:27

அருமையான பதில் சீமான்


M Ramachandran
நவ 18, 2024 14:48

ஆகக்கூடி மு.க விற்கு தகுந்த பிள்ளையாகா மாறி வருகிறார். திருட தெரிந்தவனுக்கு தெத்த தெரிகிறது என்று சொல்ல என்கிறீர்கள். ராமனுக்கு அனுமன் மாதிரி அவர் ஸ்டாலின் மருமகன். டில்லிக்கு தூது செல்வதில் பாலம் அமைப்பதில் வல்லவர். அதாவது மூக்கு கொஞ்சம் கொன்ஜமாக வெளுத்து கொண்டு வருகிறது என்று சொல்ல வருகிறீர்கள்.


சம்பர
நவ 18, 2024 14:46

குழப்பவாதி


M Ramachandran
நவ 18, 2024 14:44

நல்ல சந்தேகம்.


Haja Kuthubdeen
நவ 18, 2024 14:40

இப்படி ஒரு பக்கம் பேசிக்கொண்டே திமுக எதிர்ப்பு ஓட்டுகளை எல்லாம் பிரிப்பது என்ன அரசியலோ...ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு சில சதவீத வாக்குகள் கூடுதல் வாங்கி மார் தட்டுவதில் பிரயோஜனமே இல்லை என்பதை சீமானும் தம்பிகளும் எப்ப உணரப்போகிறார்களோ???


Rajamani K
நவ 18, 2024 14:20

விஞ்ஞான ஊழல் என்ற ஒன்றுக்கு நோபல் பரிசு அறிவித்தால் போஸ்தூமஸ் ஆக ஒருவருக்கும், வருடாவருடம் அவர் வாரிசுகளுக்கும் மட்டுமே கிடைக்கும்.


Sainathan Veeraraghavan
நவ 18, 2024 16:38

CORRECTLY TOLD.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை