உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: காங்.,கை கழற்றி விடும் கட்சிகள்!

இது உங்கள் இடம்: காங்.,கை கழற்றி விடும் கட்சிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்

என். வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:பா.ஜ.,விற்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே, அக்கட்சியை வீழ்த்த முடியும் என்று உணர்ந்து, 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டியா' கூட்டணி உருவானது. ஆனால், அக்கூட்டணி லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பற்றி பேச துவங்கிய நிலையிலேயே ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.மேற்கு வங்கத்தில் மொத்தம், 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 லோக்சபா தேர்தலில், இதில், இரண்டு இடங்களில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. இந்த இரண்டு தொகுதிகளை மட்டும், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்கிரசுக்கு ஒதுக்க முடியும் என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா கறாராக கூறியதை, காங்., ஏற்க மறுத்து விட்டது.இதனால், கடுப்பான மம்தா, '42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்' என அதிரடியாக அறிவித்து விட்டார். இதேபோல, பஞ்சாப் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான, பகவந்த் சிங் மானும், அங்குள்ள 13 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். இதனால், அங்கும் காங்., கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.கேரளாவில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்தே, இடதுசாரிகள் அரசியல் நடத்துவதால், அம்மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்தனியே நிற்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யத் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் மட்டும் தான், முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் காங்கிரசுக்கு சில தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளார்.அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி, திறப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தியதன் வாயிலாக, பா.ஜ.,வின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருப்பதால், மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'இண்டியா' கூட்டணியால், இதை தடுக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

duruvasar
ஜன 30, 2024 15:22

தமிழ்நாட்டில் காங்கிரஸிற்கும் திமுகவுக்கும் வேறு நாதியில்லை என்பதால் இப்படி கைகோர்த்து காலம் தள்ளுகிறார்கள் இதுதான் உண்மை. மற்றபடி இவங்க சீன போடற அளவுக்கு அங்கு ஒரு புண்ணாகும் கிடையாது


abdulrahim
ஜன 30, 2024 10:50

காங்கிரசை வைத்து தான் இந்த நாளிதழ்கள் பிழைப்பு நடத்துகின்ற்றன.


VENKATASUBRAMANIAN
ஜன 30, 2024 08:45

புள்ளி கூட்டணி காலியாகி விட்டது. இங்கே திமுகதான். தூக்கி பிடிக்கிறது. தமிழக மக்கள் உணர்ந்தால் சரி. இல்லையெனில் புதை குழியில் விழுந்த கதைதான்.


பேசும் தமிழன்
ஜன 30, 2024 07:49

கான் கிராஸ் கட்சி இந்த, தேவையில்லாத .... நாட்டை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.


Ramesh Sargam
ஜன 30, 2024 06:33

பாவம், இந்த நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை.


Duruvesan
ஜன 30, 2024 04:57

காங்கிரஸ் மற்றும் 23 கட்சி கூட்டணி இல்லைனா விடியல் சார் 5 mp சீட் மேல ஜெயிக்க வாய்ப்பு இல்லை. 8 தொகுதில டெபாசிட் ????


ayen
ஜன 30, 2024 03:05

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டனி இன்றி தி.மு.கா வெற்றி பெற முடியாது. காங்..ரஸ் எல்லா தொகிதிகளிலும் கணிசமான ஓட்டு உள்ளது அதை தி.மு.க தக்க வைத்துக் கொள்ளும்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி