| ADDED : மே 16, 2024 09:57 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் பணி நிறைவு பெற்ற 23 தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா -கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிறைவு விழாவில் ஆசிரியர்கள் தலையில் கிரீடம் வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டபள்ளிக் கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (2023-24 ) கல்வி ஆண்டு வரை பணியாற்றிய தலைமையாசிரியர்கள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டி அரசு மகளிர் தகை சால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது..மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலலிதா வரவேற்புரை வழங்கினார்முன்னதாக முக்காணி ,புதுக்கோட்டை ,விளாத்திகுளம்,சாத்தான்குளம், கோவில்பட்டி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற 23 தலைமையாசிரியர்களை கௌரவிக்கும் விதமாக தலையில் கிரீடம் வைத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் இதனை தொடந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுஇவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜன், தொடக்கக் கல்வி அலுவலர், மேரி டயானா ஜெயந்தி, மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..