மேலும் செய்திகள்
'மது ஒழிப்பு நாடகம் எடுபடாது!' தமிழிசை தடாலடி
17-Sep-2024
சென்னை:''தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என காத்திருந்தவர்கள் மூக்கு அறுபட்டுள்ளது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: சமூக நீதிப் பார்வையோடு, நடிகர் விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சியுடன் நம்பிக்கையும் தருகிறது. ஈ.வெ.ரா., அரசியல் என்பது சமூக நீதி மீது நம்பிக்கை வைத்துள்ள மற்றும் சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. தமிழகம் மட்டுமல்ல, பீஹார், குஜராத், நாகலாந்து, மிசோரம் மாநிலங்களை தவிர, அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு இல்லை. இதனால், மனித வளம் பாழாகிறது. தேசிய அளவிலான மது விலக்கு சட்டத்தை வரையறுக்க வேண்டும்; கண்டிப்பாக மது விலக்கு அமல்படுத்த வேண்டும். இதில் தி.மு.க.,வும் முழு உடன்பாடு கொண்டுள்ளது. முதல்வரை சந்தித்த பிறகும், எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. துணை முதல்வர் பதவி, அவர்களது தேவையை பொறுத்தது. அது, அவர்களது சுதந்திரம். தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. மக்கள் பிரச்னையான மதுவிலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்துவதை, தேர்தல் கணக்கு, கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டனர். எப்படியாவது கூட்டணியில் விரிசல், பிளவு ஏற்படாதா என்று பலரும் காத்திருந்தனர்; ஏமாந்து போனார்கள். அவர்கள் மூக்கு தான் அறுபட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட விரக்தி அவர்களிடம் வெளிப்படுகிறது. வி.சி.,யும் தி.மு.க.,வும் ஒரே நேர்கோட்டில் கொள்கையளவில் பயணிக்கின்றன. முரண்பாடான அரசியல் தான். ஆனால், இணைந்து பயணிப்போம்; கொள்கை தளத்தில் இணையாக இருக்கிறோம். தி.மு.க.,வும் விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றன; அதே நேரம், தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம், இதில் எங்கும் முரண்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
17-Sep-2024