உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசை நடத்துவோர் நீதிபதியாக முடியாது; உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேச்சு

அரசை நடத்துவோர் நீதிபதியாக முடியாது; உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேச்சு

சென்னை: ''அனைவருக்கும் பொருந்தக்கூடிய, ஒரே ஒரு பொதுக்கருத்து இருக்க முடியாது'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நடராஜனின் நுாற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

தனித்துவமான கருத்து

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா பேசியதாவது:சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட அமைப்பின் வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றியவர் நீதிபதி நடராஜன். அவரது தீர்ப்புகள், சமூக நீதியை, சமத்துவத்தை, உறுதிப்படுத்துவதாக இருந்தன. பல நீதிபதிகள் அடங்கிய அமர்வில், அவர் தனித்துவமான கருத்தை வெளிப்படுத்தியவர். சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில், நான் அளித்த தீர்ப்புகள் நினைவுக்கு வருகின்றன.சட்டம் இயற்றும் மக்கள் மன்றங்கள், அதை செயல்படுத்தும் அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியவை, அதற்கென உள்ள தனித்துவங்களுடன் செயல்பட வேண்டும். அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் முக்கிய அமைப்புகள் செயல்பட வேண்டும். ஜனாதிபதிக்கும், மாநிலங்களின் கவர்னர்களுக்கும், அரசியலமைப்பு குறிப்பிட்ட அளவுக்கு அதிகாரங்களை வழங்கி உள்ளது. அதேநேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு, பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் முரண்பாடுகள் ஏற்பட்டு, அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வரம்பை மீறுவதாகும்

அரசை நடத்துவோர் நீதிபதியாக முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என முடிவு செய்து, நீதிமன்றம் தான் தண்டிக்க முடியும். அதற்கு முன்னரே, அவரது வீடு அல்லது வணிக கட்டடங்களை இடிப்பது, அரசு நிர்வாகத்தின் அதிகார வரம்பை மீறும் செயலாகும். நம் அரசியலமைப்பில், இது போன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு இடமில்லை. இத்தகைய அத்துமீறல்கள், சட்டத்தின் கடுமையான கைகளால் கையாளப்பட வேண்டும். இது தொடர்பாக, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நினைவுபடுத்த விரும்புகிறேன். அனைவருக்கும் பொருந்தக்கூடிய, ஒரே ஒரு பொதுக்கருத்து இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது, குறிப்பிட்ட நேரத்தில் வெளிப்படும் பல்வேறு கருத்துக்களில் இருந்து, ஒருமித்த கருத்தை அடைவதாகும். ஒரு உண்மையான ஜனநாயகத்தில், மாறுபட்ட கருத்தையோ, சிந்தனையையோ சீர்குலைக்க முடியாது. முரண்பாடாக தோன்றும் கருத்துக்களை கட்டுப்படுத்த முடியாது. நம் அரசியலமைப்பு, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Selvaraj K
நவ 18, 2024 23:23

எதெ குற்றம் சாட்டபட்டவர் தற் காப்ப கூட விசாரணை செய்யாமல் காவல் துறை சோடிக்கும் பொய் வழக்க கொண்டு தண்டனை வழங்குவது மட்டும் தான் உங்கள் கடமைய ? உங்களால் தண்டிக்கப்பட்டவர் உயிர் & வாழ்க்கை பற்றி அக்கரை இல்லை அரசியல் சாசனம் படி தான் நடக்குற பேச தகுதி இல்லை


S.Martin Manoj
நவ 18, 2024 13:56

பலருக்கு இது ... போல் இருக்கும்


UTHAYA KUMAR
நவ 18, 2024 12:48

30 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு உயர் நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2024ல், மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள 180,000 நீதிமன்ற வழக்குகள் உட்பட அனைத்து வகையான மற்றும் அனைத்து நிலைகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 51 மில்லியன் அல்லது 5.1 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. This is the REAL injustice....


tamil kodi
நவ 18, 2024 10:27

நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை