உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு

லக்னோ: 'பா.ஜ.,வின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற பொம்மைகள் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்படுகிறது' என காங்., எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் இன்று (பிப்.,19) மேற்கொண்டார். அப்போது ராகுல் பேசியதாவது: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஜனாதிபதி முர்முவை கூட அழைக்கவில்லை. ஜனாதிபதியை அழைக்காதது அவமதிக்கும் செயல் ஆகும்.நாட்டின் 73சதவீதம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.மதத்தின் பெயரால் நாட்டில் வெறுப்புணர்வை பரப்பும் பணி நடக்கிறது. பா.ஜ.,வின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற பொம்மைகள் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை