உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி – கார் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் மூவர் பலி

லாரி – கார் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் மூவர் பலி

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில், கோவிந்தராசு, 60, என்பவர் உட்பட அய்யப்ப பக்தர்கள், மூவர் பலியாகினர். நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. பூக்கடை நடத்தினார். உறவினர்கள், ஆறு பேருடன் இரு நாட்களுக்கு முன், சபரிமலைக்கு, ‘மாருதி ஈக்கோ’ காரில் சென்றார். தரிசனம் முடிந்து, அனைவரும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 1:45 மணியளவில் அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கோவிந்தராசு, உறவினர்களான மணிகண்டன், 43, பழனிவேல், 38, ஆகிய மூவர், சம்பவ இடத்தில் பலியாகினர். காரில் பயணித்த தனுஷ், 21, ஹரிஷ், 17, சிதம்பரம், 45, தன்ஷிகா, 8, ஆகிய நால்வர் காயமடைந்து, அரவக்குறிச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக, கரூர் தனியார் மருத்துவ மனைக்கு, ஹரிஷ் அனுப்பி வைக்கப்பட்டார். அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை