உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி அருகே விபத்தில் எரிந்த கார் சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி; இருவர் படுகாயம்

விக்கிரவாண்டி அருகே விபத்தில் எரிந்த கார் சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி; இருவர் படுகாயம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அதிவேக பயணத்தின் போது, மீடியன் மற்றும் லாரி மீது மோதி கவிழ்ந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்தில், சென்னையை சேர்ந்த மூன்று வாலிபர்க ள் உயிரிழந்தனர்; இருவர் படுகாயமடைந்தனர். சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் அஜீஸ், 25; தனியார் வங்கி ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன், 23; தனியார் நிறுவன ஊழியர். மூணாறு சுற்றுலா கொளத்துாரை சேர்ந்தவர் தீபக், 25; தனியார் வங்கி ஊழியர். ரிஷி, 25; ஐ.டி., ஊழியர். ஆவடி, பட்டாபிராமை சேர்ந்தவர் மோகன்ராஜ், 25; தனியார் வங்கி ஊழியர். நண்பர்களான இவர்கள், ஆயுதபூஜை விடுமுறையை கொண்டாட மூணாறு சுற்றுலா செல்ல முடிவு செய்து, நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு அஜீசுக்கு சொந்தமான, 'ஹூண்டாய் வெர்ணா' காரில் சென்னையில் இருந்து புறப்பட்டனர். காரை அஜீஸ் ஓட்டினார். காலை, 6:40 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மீடியனில் மோதி, முன்னால் சென்ற டாரஸ் லாரி மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. சிகிச்சை காரிலிருந்து வெளியே வந்த அ ஜீஸ், முன் சீட்டில் அமர்ந்திருந்த சம்சுதீனை மீட்ட போது, தலையில் படுகாயமடைந்து சம்சுதீன் இறந்தது தெரிய வந்தது. இதற்கி டையே, அங்கிருந்த பொதுமக்கள் பின் சீட்டில் அமர்ந்திருந்த தீபக்கை மீட்டனர். அதற்குள் கார் தீப்பிடித்து எரிந்தது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காரில் மயங்கி கிடந்த ரிஷி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் மீட்க முடியவில்லை. இதனால், இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த அஜீஸ், தீபக் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டனர். விக்கிரவாண்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் டோல் பிளாசா ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ