உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய்லாந்தில் இந்தியரை கடித்து குதறிய புலி

தாய்லாந்தில் இந்தியரை கடித்து குதறிய புலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியருடன் பழக பயிற்சியளிக்கப்பட்ட புலி திடீரென கோபமடைந்து இந்திய சுற்றுலா பயணியை கடித்து குதறியது.தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கட் தீவு சர்வதேச சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடமாக உள்ளது. இங்கு அழகிய கடற்கரைகள், நீர் சாகச விளையாட்டுகள், உள்ளூர் சந்தை, வனவிலங்குகளுடன் பழகும் உயிரியல் பூங்காக்கள் உள்ளன.'டைகர் கிங்டம்' என்ற பெயரில் தனியார் உயிரியல் பூங்கா புக்கட்டில் உள்ளது. இதில் பல்வேறு வயது மற்றும் அளவு உள்ள புலிகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் கட்டணம் செலுத்தி இந்த உயிரியல் பூங்காவுக்கு செல்கின்றனர்.அங்கு உள்ள புலிகளை தொட்டு பார்க்கலாம், வாக்கிங் அழைத்துச் செல்லலாம், புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவை அதற்கு ஏற்ப குட்டிகளிலேயே பயிற்சி அளிக்கப்பட்டவை. இதனால் சாந்தமாக பூனைக்குட்டி போலவே இருக்கும்.இந்நிலையில் சமீபத்தில் டைகர் கிங்டம் உயிரியல் பூங்காவுக்கு சென்ற இந்தியர், அங்கு உள்ள மிகப்பெரிய புலியை வாக்கிங் அழைத்துச் சென்றார். அதன் முதுகில் தட்டிக்கொடுத்த படி நடந்தார். உடன் புலியின் பயிற்சியாளரும் வந்தார்.புகைப்படம் எடுப்பதற்காக புலி மீது கை போட்டு அமர்ந்த போது ஆத்திரமடைந்த புலி அவரை கீழே தள்ளி கடித்தது. அவர் பயத்தில் கதறினார். பயிற்சியாளர் போராடி புலியை கட்டுப்படுத்தினார். இதனால் லேசான காயங்களுடன் சுற்றுலா பயணி உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

முருகன்
மே 31, 2025 19:35

விளம்பர உலகினில் மனிதன் பலி ஆடு ஆகிறான்


sellakkannu
மே 31, 2025 13:44

விலங்கின் மனநிலையிலிருந்து மனிதன் பார்க்கவேண்டும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிற மனநிலையில் அவரை தாக்கியிருக்கிறது,


Natchimuthu Chithiraisamy
மே 31, 2025 11:58

தன் தோள்மீது கைவைக்க மனிதன் தகுதியானவனா ? என்கிறது புலி.


Kasimani Baskaran
மே 31, 2025 07:08

பூனை போல சாந்தமாக இருந்தாலும் அவை கொடிய விலங்குகள். ஆகவே கவனமாக இருப்பது நல்லது. சில நேரங்களில் போதிய உணவு கொடுக்கப்படவில்லை என்றால் இது போல நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 31, 2025 11:00

விலங்குகள் கொடியது இல்லை. மனிதனுக்கு என்று எப்படி ஒரு சுபாவம் உள்ளதோ அந்த அந்த விலங்குகளுக்கு அந்த சுபாவங்கள் இயற்கையாக அமைந்தவை.


Thravisham
மே 31, 2025 04:45

புலிகளின் முகத்தை நேருக்கு நேர் பக்கம் பார்க்க கூடாது என்று அங்கு சொல்லப் பட்டிருக்குமே இவர் அதை மீறினாரா ?


சமீபத்திய செய்தி