உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலை எடுபடாது :ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலை எடுபடாது :ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம் : தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலை எடுபடாது. போலி்யான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட மோடி மாடல் தோல்வி அடைந்துள்ளது. என முதல்வர் ஸ்டாலின் கூறினார். பார்லிமென்ட் லோக்சபா தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சேலம் செல்வகணபதி, மற்றும் கள்ளக்குறிச்சி மலையரசன் ஆகியோரை ஆதரித்து சேலத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.அவர் பேசியதாவது: பிரதமர் மோடியால் மொத்த நாடே தூக்கத்தைதொலைத்து விட்டு நிம்மதியின்றி தவிக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் வரையில் தென் மாநிலங்களில் பா.ஜ.வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது. தற்போது வடமாநிலங்களிலும் பா.ஜ.,க ஆட்சிக்கு வர முடியாது என உளவுத்துறை பிரதமருக்கு ரிப்போர்ட் அளித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் சாதாரண மக்கள், பெண்கள் தூக்கத்தை தொலைத்து விட்டனர். தேர்தல் நேரத்தில் பிரதமர் இடி, சி,பி.ஐ., ஐ.டி போன்ற துறைகளை பயன்படுத்தி வருகிறார்.

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்;

சினிமா காமெடி போல, பா.ஜ.,வுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக். தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்காமல் கவர்னர், சிட்டிங் எம்.எல்.ஏ.,வை நிறுத்துகின்றனர். பா.ஜ,.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவை விட கீழே போகாமல் டிபாசிட் ஆவது வாங்க வேண்டுமே என்பது தான்.அதனால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்து மோடி பேசுகிறார்.உயிருடன் இருந்த போது ஜெயலலிதாவை பாராட்டாத பிரதமர் இப்போது எப்படி பாராட்டுகிறார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஜெயலலிதாவும், சோனியாவும் தான் காரணம் என கூறி இருந்தார்.பெண்கள் சக்தி பற்றி பேசும் பிரதமர் பெண்கள் பாதுகாப்பு நிதியான நிர்பயா நிதியை ஒதுக்கவில்லை.தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் இருந்து வருகிறது. சகோதரத்துவத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது இந்த புண்ணிய பூமிக்கு ஏன் பிரதமர் வரவில்லை.வெள்ள பாதிப்பு, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை பிரதமர் வழங்காதது ஏன்? எப்படியாவாதுஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இந்திய ஜனநாயக அமைப்பை சீரழித்து வருகிறார். இந்தியாவிலேயே ஊழல் நடைபெறும் ஆட்சி ஜெ.,ஆட்சி என்று கூறியவர் ஓட்டுக்காக இன்று அவரை புகழ்கிறார். தமிழ்பேச முடியவில்லை என்று கூறியவர் அகில இந்திய வானொலியை ஆகாஷவாணி என்று மாற்றி உள்ளார். கேட்டு கேட்டு புளித்துபோன குடும்பஅரசியல் என்ற பல்லவியை திரும்ப திரும்ப பாடி உள்ளார் பிரதமர். தே.ஜ.,கூட்டணியில் ஏற்கனவே உள்ள பா.ம.க., ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோர வில்லை குடியுரிமை சட்டத்தை ஆதரித்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்று பிரதமர் கூறும் புதிய அவதூறுக்கு ஆதாரம் உள்ளதா . பா.ஜ.,வில் இணைந்துள்ள சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் 25 பக்கம்கொண்ட பட்டியல் என்னிடம் உள்ளது. நான் சொல்வது தவறு என்றால் என் மீது வழக்கு தொடர தெம்பும் திராணியும் இருக்கிறதா? திமுகவில் இருந்த நபருக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது அந்த நபர் அடுத்த நொடியிலேயே கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். போதை பொருள் அதிகம் புழங்கும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது பா.ஜ,,தான். போதை பொருள் கடத்தல் வழக்கில் பா.ஜ,வை சேர்ந்த 14 பேர் சிறையில் உள்ளனர். மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருந்த போது பிரதமர் எங்கே போயிருந்தார்?.

தமிழகத்தில் எடுபடாது

தமிழத்தில் திமுக இருக்கும் வரையில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது பழனிசாமிக்கு வாக்களிக்க உண்மையான அதிமுக தொண்டர்கள்,.,விசுவாசிகள் தயாராக இல்லை, பா.ஜ.வுக்கு எதிராக பழனிசாமி பேசுவதை அவரது எஜமானர் விசுவாசம் தடுக்கிறதா போலி்யான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட மோடி மாடல் தோல்வி அடைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 77 லட்சத்து 78 ஆயிரம் பேருக்குவேலைவாய்பபு கிடைத்து உள்ளது. மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு பா.ஜ.,அரசு உதாரணம். தமிழகத்தில் உண்மையான மக்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் பத்திர ஊழலால் பா.ஜ.,வினரின் தூக்கம் தொலைந்துள்ளது. மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

kulandai kannan
மார் 31, 2024 15:44

கச்சத்தீவில் மிக்சர் சாப்பிட்ட கருணாநிதியின் மகன் சொல்கிறார்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 31, 2024 12:45

பிரதமருக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் எப்படி உங்களுக்கு தெரியும்? பிரதமர் அலுவலகத்திலேயே நீங்கள் உளவு பார்த்தீர்களா? அப்படி என்றால் நாட்டின் பாதுகாப்பு நிலை என்ன? RAW உளவு அமைப்பு இது பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும்?


PREM KUMAR K.R.
மார் 31, 2024 11:03

தி.மு.க. ஒரு ஊழல் ஆட்சி என இந்திராவால் முத்திரையிடபட்டு ஆட்சியை இழந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தற்போதைய தேர்தல் பொதுகூட்டங்களில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை திட்டங்களாக மாற்றி நிறைவேற்றி விட்டதாகவும் ஆனால் பத்து ஆண்டுகளில் மோடி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட தேர்தல் கால பொய்களை வாய் கூசாமல் கூறி வருகிறார். அந்த பொய்களின் உச்சகட்டமாக தான் நேற்று சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடந்த கூட்டத்தில், கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் 77,78,99 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்ததாக யாரும் சரிபார்க்க முன்வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் - நம்பிக்கையில் ஏதோ ஒரு தொலைபேசி எண்ணை போன்ற கற்பனை எண்ணிக்கையை கொடுத்துள்ளார். இதை போல் மேலும் கற்பனை பத்து இலக்க எண்கள் அடங்கிய பட்டியலை கூட தைரியமாக ஏப்ரல் 17-ம் தேதி வரை வெளியிட தயங்க மாட்டார். அதை அவரது கூட்டணியினரும் மேடைகளில் கூற வைப்பார்.


பேசும் தமிழன்
மார் 31, 2024 10:12

எல்லாம் உங்கள் பங்காளி அதிமுக கட்சி இருக்கும் தைரியத்தில் தான் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்று தெரிகிறது... நீங்கள் சொல்லி தான் அவர்கள் ஓட்டை பிரிக்க தனியாக போட்டியிடுவதாக கேள்வி.. அந்த காலம் மாறும்.. தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்பதை.. தமிழர்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிறார்கள்.


Rajasekar Jayaraman
மார் 31, 2024 08:55

போதை மறந்து கடத்தல் மட்டும் நடக்கும் போல இருக்கு சபாஷ்.


Prasanna Krishnan R
மார் 31, 2024 08:04

என் மாநிலத்தை விட்டு வெளியேறு. இது தமிழ்நாடு.


ராமகிருஷ்ணன்
மார் 31, 2024 04:07

தமிழகத்தின் திமுக என்ற கட்சியே இருக்காது, துடைத்து ஒழிக்கப்படும். மத்தியில் காங்கிரஸ் ஒழிந்து வருவது போல தமிழகத்தில் திமுக ஒழியும்.


Kanakaraj
மார் 31, 2024 00:50

மத்தியில் மோடி ஜீ ஆட்சி இருக்கும் வரை திமுகவின் விஞ்ஞான ஊழல்களை நடக்கவிட மாட்டார்கள் மணல் கடத்தலை அனுமதிக்க மாட்டார்கள் லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்க விட மாட்டார் போதை பொருள் கடத்த விட மாட்டார் தேச விரோத பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் திமுகவின் பேச்சை மோடி ரசிக்க மாட்டார் மக்களும் ஏற்க மாட்டார்கள் ஆக மொத்தத்தில் தமிழகத்தில் மொழியை வைத்து பிழைப்பு நடத்த முடியாது பொய்யை சொல்லி வாக்கு கேட்க முடியாது கருவாடு மீனாகாது ஸ்டாலினின் இண்டி கூட்டணி கரை சேராது


Kanakaraj
மார் 31, 2024 00:38

தூத்துக்குடி திருநெல்வேலியில் மழையால் வெள்ளம் வந்து வீடுகளுக்குள் தண்ணீர் வந்து மக்கள் தவித்து கொண்டிருக்கையில் பிகாரில் நடந்த இண்டி கூட்டணி கூட்டத்திற்கு போனது யார் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார் திமுக வரும் நாடளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வ போவது உறுதியாகி உள்ளது


Meevin
மார் 31, 2024 00:20

திருடர்கள் முரடர்கள் கபோதிகள் இருக்கும் வரை மோடியின் திட்டங்கள் எதுவும் மக்களுக்கு செல்ல விட மாட்டார்கள் இதை தெளிவாக சொல்லுகின்றார்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி