உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலெக்டர் வீட்டு மதில் சுவரை சாய்த்த கனமழை! ஊரெங்கும் ஆறாக ஓடிய வெள்ளம்

கலெக்டர் வீட்டு மதில் சுவரை சாய்த்த கனமழை! ஊரெங்கும் ஆறாக ஓடிய வெள்ளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை; கனமழையால் திருவண்ணாமலை கலெக்டர் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்தது.பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. உள்மாவட்டமான திருவண்ணாமலையும் பெஞ்சல் புயலுக்கு தப்பவில்லை. அங்கும் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மணி நேரத்தில் கனமழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் அங்குள்ள சாலைகள் தெரியாத அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது. அனைத்து சாலைகளையும் மூழ்கடித்த வண்ணம் வெள்ளம் செல்கிறது. இந் நிலையில், மழை வெள்ள பாதிப்பில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வீடும் தப்பவில்லை. வெள்ள நீரின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அவர் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. கலெக்டர் வீட்டின் அருகே உள்ள வேங்கிகால் ஏரி நிரம்பி வழிகிறது. அங்கு இருந்து வெளியேறும் நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. தொடர் மழை காரணமாக, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து, வெள்ள நீர் உள்ளே சென்றுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் மக்கள் வீடுகளில் இருக்குமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
டிச 02, 2024 13:32

நாளைக்கே ஓசியில் ஏதேனும் ஒரு ஒப்பந்தக்காரர் கட்டி கொடுப்பார்


Mani . V
டிச 02, 2024 05:56

அதிக மழை பெய்தும் பாதிப்பில்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்


Mohan
டிச 02, 2024 01:14

குஜராத்தில் நல்ல ஆரியன் கட்டியது வெள்ளத்தில் போகாது


அஜய்
டிச 01, 2024 20:43

கலெக்டர் விட்டு சுவற்றையும் ஒரு திருட்டு திராவிடன் தான் காண்டிராக்ட் எடுத்து கட்டியிருப்பான்.


Ramesh Sargam
டிச 01, 2024 19:24

கருணாநிதி வீட்டை சூழ்ந்த மழை. கலெக்டர் வீடு மதில் சுவர் சாய்ந்தது மழையில். மழைக்கு முன் எல்லோரும் சமமப்பா. ஊரை ஏமாற்றலாம். ஆனால் இயற்கையை ஏமாற்றமுடியாது. இன்று ஏமாற்றினாலும், நாளை வெச்சு செய்யும் இயற்கை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை