உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று தக்காளி வாங்கினால் கிலோவுக்கு ரூ.50 மிச்சம்! டக்கென்று மாறியது விலை

இன்று தக்காளி வாங்கினால் கிலோவுக்கு ரூ.50 மிச்சம்! டக்கென்று மாறியது விலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெருமழை பெய்ததால் மக்களின் அன்றாட தேவைக்கான உணவு பொருட்கள் விலை நினைத்து பார்க்கமுடியாத விலையில் விற்கப்படும். கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டியது. மழை அறிவிப்பு வெளியான தருணத்தில் முன் எச்சரிக்கையாக பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u0g6ilxq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய காய்கறிகள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்தது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. திடீரென ஏற்பட்ட இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கிட்டத்தட்ட கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை மொத்தம் மற்றும் சில்லரை விலையில் உயர்வு காணப்பட்டது. மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய 1,300 டன் தக்காளிக்கு பதிலாக வெறும் 800 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதுவே விலையேற்றத்துக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறி இருந்தனர்.இந்நிலையில், சென்னையில் இன்று பெருமழை பெய்யாததால் தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. குறிப்பாக, கோயம்பேடு சந்தைக்கு போதிய அளவு தக்காளி இன்று வந்து சேர்ந்தது. இதையடுத்து, ஒரு கிலோ தக்காளி சந்தையில் ரூ.70க்கும், சில்லரை விற்பனையில் ரூ.85 வரையும் விற்கப்படுகிறது. ஒரே நாளில் உச்சத்துக்கு போன தக்காளி விலை, தற்போது கிலோவுக்கு 50 ரூபாய் வரை குறைந்துள்ளது, வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramamurthy N
அக் 17, 2024 14:44

மழை வந்தால் லாரிகள் வருவது குறையும் காய்கறிகள் விலை உயரும். எந்த அரசையும் குறை சொல்ல இயலாது. அதே போல் வறட்சி காரணமாகவும் விலைவாசி உயரும். வெட்டி பைச்சு பேசாமல் வேலையை பாருங்கள்.


SANKAR
அக் 16, 2024 16:21

nowhere in the news Govt is blamed. Why imagine non existent news?!


வைகுண்டேஸ்வரன்
அக் 16, 2024 17:15

My post was in response to one palanisami sekar, who writes utter rubbish. While the news say, price has come down he whites as, "govt failed to control price hike". Funny guy. I youll my post will give him some common sense.


வைகுண்டேஸ்வரன்
அக் 16, 2024 15:44

தக்காளி க்கும் அரசாங்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம்??? பரம்பரை பரம்பரை யா வாழ்ந்து கிட்டு இருக்கும் ஊரைப் பற்றி இப்படி எதிர்மறையாகவே கருத்து போட்டுக்கிட்டு எப்படிய்யா நீங்க எல்லாம் இருக்க முடிகிறது? எப்ப பாத்தாலும் டாஸ்மாக் னு புலம்ப வேண்டியது, இல்லன்னா அரசை திட்ட வேண்டியது? எப்படி உங்களுக்கெல்லாம் படுத்தா தூக்கம் வருமா? உண்ட சோறு செரிக்கிறதா?? எப்ப பாத்தாலும் நெகடிவ் எண்ணங்கள், எதிர்மறை கருந்துகள். யாருக்குமே பாசிட்டிவ் சிந்தனையே இல்லாம எப்படி உங்களால் வாழ முடிகிறது?? இப்படி இருப்பதில் என்ன கிடைக்கிறது? அதுவும் சில மாமூல் வாசகர்களுக்கு எப்போதும் எதிர்மறை வார்த்தை கள் தான். அவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் பாவமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிண்டே இருப்பார்களே??


அருணாசலம்
அக் 16, 2024 17:15

வைகுண்டம்! அப்போ வெங்காயத்துக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்?


வைகுண்டேஸ்வரன்
அக் 16, 2024 15:44

பரம்பரை பரம்பரை யா வாழ்ந்து கிட்டு இருக்கும் ஊரைப் பற்றி இப்படி எதிர்மறையாகவே கருத்து போட்டுக்கிட்டு எப்படிய்யா நீங்க எல்லாம் இருக்க முடிகிறது? எப்ப பாத்தாலும் டாஸ்மாக் னு புலம்ப வேண்டியது, இல்லன்னா அரசை திட்ட வேண்டியது? எப்படி உங்களுக்கெல்லாம் படுத்தா தூக்கம் வருமா? உண்ட சோறு செரிக்கிறதா?? எப்ப பாத்தாலும் நெகடிவ் எண்ணங்கள், எதிர்மறை கருந்துகள். யாருக்குமே பாசிட்டிவ் சிந்தனையே இல்லாம எப்படி உங்களால் வாழ முடிகிறது?? இப்படி இருப்பதில் என்ன கிடைக்கிறது? அதுவும் சில மாமூல் வாசகர்களுக்கு எப்போதும் எதிர்மறை வார்த்தை கள் தான். அவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் பாவமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிண்டே இருப்பார்களே??


R S BALA
அக் 16, 2024 14:00

அயோக்கிய புரோக்கர்கள் செய்யும் வேலை இது..


Palanisamy Sekar
அக் 16, 2024 12:53

இந்த ஆட்சியில் யாராவது ஒரு பிரிவினர் நொந்துதான் போகிறார்கள். எவருமே இந்த ஆட்சியை பாராட்டி கேட்டதே கிடையாது. விமர்சனங்களுக்கு ஆளான இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு என்பது சர்வ சாதாரணம். கட்டுப்படுத்த தெரியாத ஆட்சி இது. திமுகவில் உள்ள பணக்கார கவுன்சிலர்களும், எம் எல் ஏக்களும், எம் பிக்களும், சாராய வியாபாரிகளும், கஞ்சா வியாபாரிகளும், கள்ளச்சாராய வியாபாரிகளும், மணல் கொள்ளையாளர்களும், மட்டும்தான் சொந்த செலவில் இந்த அரசை பாராட்டிக்கொண்டுள்ளார்கள். ஏனனில் சம்பாதிக்க முடிவதால். பொதுமக்களில் சாமான்ய பொதுமக்களின் கஷ்டப்படுவது இந்த ஆட்சியால் வந்த வினைதான். தக்காளி விலை பிதுக்கப்பட்டதால் விவசாயிகளின் கண்ணீர் இந்த ஆட்சியாளர்களை சபிக்காமல் விடாது. விலையை கூடுதலாக வாங்கிய பொதுமக்களும் இந்த ஆட்சியாளர்களை திட்டி தீர்ப்பார்கள். இதுவரையில் தமிழகம் இப்படி ஒரு மோசமான ஆட்சியை கண்டதே கிடையாது.


SANKAR
அக் 16, 2024 16:25

you mean veg prices are high ONLY IN TN and govt is responsible.In other states?Basically koyambedu wholesalers blame HIGH TRANSPORT COST


புதிய வீடியோ