உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் பாலத்தை கண்டு ரசிப்பதற்காக இலங்கையில் சுற்றுலா படகு சவாரி

ராமர் பாலத்தை கண்டு ரசிப்பதற்காக இலங்கையில் சுற்றுலா படகு சவாரி

ராமேஸ்வரம்:இலங்கை தலைமன்னாரில் இருந்து ஸ்ரீ ராமர் அமைத்த பாலத்தை கண்டு ரசிக்கும் வகையில் இலங்கை அரசு சுற்றுலா படகு சவாரி துவக்க உள்ளது.இலங்கையில் ராவணன் சிறை வைத்த சீதா பிராட்டியை மீட்க ஸ்ரீராமர் தனுஷ்கோடி யில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்து ராவணனிடம் போரிட்டு வென்று சீதையை மீட்டு தனுஷ்கோடி வந்ததாக ராமாயணம் கூறுகிறது.தற்போது ஸ்ரீ ராமர் அமைத்த பாலம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை (40 கி.மீ.,) கடலுக்குள் புதைந்து ஆங்காங்கே மணல் தீடைகளாக காணப்படுகிறது.இந்த மணல் தீடைகள் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கவும், தரிசிக்கவும் இலங்கை தலைமன்னாரில் இருந்து சுற்றுலாப்படகு சவாரியை துவக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 10 சுற்றுலாப் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒவ்வொரு படகிலும் தலா 10 பேர் பயணிக்கும் வகையிலும் உள்ளது. இந்த ராமர் பாலம் சுற்றுலாப்படகு திட்டத்திற்கு இலங்கை கடற்படை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.இதில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் படகில் வைக்கவும், சுற்றுலாப்படகுகள் 2 முதல் 3 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்த சுற்றுலா படகு சவாரியை ஜூன் 7 க்குள் துவக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி