வர்த்தக துளிகள்
பி.எஸ்.இ.,யில் ராணுவ குறியீடு அறிமுகம்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு சேவைகளில், ராணுவ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பி.எஸ்.இ., 1000 குறியீட்டில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த குறியீடு, ஜூன், டிசம்பரில் மறுகட்டமைப்பு செய்யப்படும். இந்தியாவின் ராணுவ துறையானது கொள்கை மாற்றங்கள், பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிப்பு, சொந்த தயாரிப்பு ஆகியவற்றால் பெரும் மாற்றங்களை கண்டு வரும் நிலையில், பி.எஸ்.இ.,ராணுவ குறியீடு, முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான, விதிகளுக்குட்பட்ட, முதலீட்டு வளர்ச்சியை அளிக்கும் என பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. ஆபரணங்கள் ஏற்றுமதி 15.98 சதவிகிதம் அதிகரிப்பு @
@கடந்த ஜூலை மாதத்தில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 15.98 சதவீதம் அதிகரித்து இருப்பதாக நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூலையில் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 15,000 கோடி ரூபாயாக பதிவான நிலையில், நடப்பாண்டு இதே காலத்தில் 18,756 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இந்திய சர்வதேச ஜூவல்லரி கண்காட்சி வாயிலாக பெறப்பட்ட ஆர்டர்கள் மற்றும் ஹாங்காங் சந்தையில் தேவை மீண்டு இருப்பது ஆகியவை ஏற்றுமதி அதிகரிக்க முக்கிய காரணங்களாக அமைந்தது.