உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 12 ஐ.ஏ.எஸ்.கள் மாற்றம்

6 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 12 ஐ.ஏ.எஸ்.கள் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று ஒரே நாளில் 6 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:1) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமனம்.2) தோட்டக்கலை இயக்குனராக இருந்த பிருந்தா தேவி: சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றம்.3) உயர்கல்வித்துறை துணை செயலராக இருந்த தற்பகராஜ்: திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக மாற்றம்.4) மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கிஷோர் : தென்காசி மாவட்ட கலெக்டராக நியமனம்.5) மின்னணு கார்ப்பரேசன் நிர்வாக இயக்குனராக இருந்த அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக மாற்றம்.6) வணிகவரித்துறை இணை கமிஷனராக இருந்த சுப்புலெட்சுமி வேலூர் மாவட்ட கலெக்டராக மாற்றம்.7) திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்த முருகேஷ்: வேளாண் இயக்குனராக நியமனம்.8) வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல்பாண்டியன்: தோட்டக்கலை இயக்குனராக நியமனம்.9) தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் : உயர்கல்வித்துறை துணை செயலராக நியமனம்10) எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக இருந்த லெட்சுமி : மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக நியமனம்.11) வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக இருந்த பிரகாஷ் வேளாண் வணிக மற்றும் வர்த்தக கமிஷனராக நியமனம்.12) வேளாண் வணிக மற்றும் வர்த்தக கமிஷனராக இருந்த நடராஜன்: வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை