உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து ஓய்வூதியர்கள் சென்னையில் தர்ணா போராட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சென்னையில் தர்ணா போராட்டம்

சென்னை:போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை தொகையை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.பல்லவன் இல்லம் அருகே நடந்த போராட்டத்தில், போக்குவரத்து கழகங்கள், மின்வாரியம், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலர் கர்சன் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு, நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உட்பட, 17 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !