உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உறைபனியை ரசித்த பயணிகள் வெண் பஞ்சு மேகங்களால் மகிழ்ச்சி

 உறைபனியை ரசித்த பயணிகள் வெண் பஞ்சு மேகங்களால் மகிழ்ச்சி

மூணாறு: மூணாறில் உறைபனியை ரசித்த சுற்றுலா பயணிகள் வெண் பஞ்சு மேகங்களை பார்த்து மகிழ்ந்தனர். மூணாறில் தற்போது குளிர்காலம் என்றபோதும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட கால நிலை நிலவி வருகிறது. மூணாறைச் சுற்றி கன்னிமலை, நல்லதண்ணி, சிவன் மலை, செண்டுவாரை, சைலன்ட்வாலி, தேவிகுளம், லாக்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் இரவு, காலை நேரங்களில் வெப்பநிலை ' ஜீரோ' டிகிரி செல்சியஸ் வரை குறைந்து டிச.20 முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் உறைபனி ஏற்பட்டது. நேற்று காலை வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் நிலவிய நிலையில், பகலில் மேகங்கள் சூழ்ந்து மந்தமான காலநிலை நிலவியது. அதேசமயம் எல்லப்பட்டி எஸ்டேட், தமிழக, கேரளா எல்லையான டாப் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது கடல் அலை போன்று வெண்பஞ்சு மேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. உறைபனியை ரசித்த பயணிகள் வெண் பஞ்சு மேகங்கங்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி