உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 23 வழித்தடங்களில் மீண்டும் மலையேற்றம்

23 வழித்தடங்களில் மீண்டும் மலையேற்றம்

சென்னை:வனத் தீ பருவ காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் மலையேற்ற திட்டங்களுக்கு, அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக வனம் மற்றும் வன உயிரின பகுதிகளில், தீ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆண்டுதோறும் பிப்., 15 முதல் ஏப்., 15 வரை, மலையேற்ற வழித்தடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மீண்டும் வனத் தீ பருவகாலம் முடிந்த பின், ஏப்., 16 முதல் மலையேற்றத் திட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.நடப்பாண்டுக்கான தடை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் மலையேற்றம் மேற்கொள்ள, பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தம் உள்ள, 40 மலையேற்ற வழித்தடங்களில், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள 23 வழித்தடங்களுக்கு, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை