உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 23 வயதில் சிவில் நீதிபதி தேர்வில் சாதித்த பழங்குடி பெண்: குவியும் பாராட்டு

23 வயதில் சிவில் நீதிபதி தேர்வில் சாதித்த பழங்குடி பெண்: குவியும் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 23 வயதுடைய பழங்குடி பெண் ஸ்ரீபதி, சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்காக ஸ்ரீபதியை பலரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உச்சியில் இருக்கிறது புலியூர் குக்கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீபதி என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 'சிவில் நீதிபதி' தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகியிருக்கிறார். 23 வயதே ஆன ஸ்ரீபதிக்கு பி.ஏ., பி.எல் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்துக்குப் பிறகும் படிப்பைத் தொடர அவரது கணவர் உதவியாக இருந்திருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k1pv57wm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், கர்ப்பமடைந்த ஸ்ரீபதி நீதிபதி தேர்வுக்கும் தயாரானார். பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்திருக்கிறது. ஆனால், நல்வாய்ப்பாகத் தேர்வு தேதிக்கு இரண்டு நாள்கள் முன்பே குழந்தை பிரசவித்திருக்கிறார் ஸ்ரீபதி. ஆனாலும் முயற்சியை கைவிடாத ஸ்ரீபதி, அந்த நிலையிலும் சென்னைக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். தற்போது சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிப்பெற்று சாதித்துள்ளார்.அவருக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி, 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!. பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழகம் தரும் பதில்!. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Ramesh Sargam
பிப் 14, 2024 10:01

முதல்வர் பாராட்டை கேட்டவுடன் சிரிப்பு வருகிறது. இதேபோன்று அவர், அவர் மகன் ஏன் சாதிக்கவில்லை? வாரிசு என்கிற ஒரே ஒரு qualification வைத்துக்கொண்டு இன்று உங்கள் குடும்ப உறுப்பினர் மட்டுமே அந்த முதல்வர் பதவிக்கு வருகின்றார்கள். இந்த பெண் போல ஏன் நீங்கள் சாதிக்கவில்லை?


Ramesh Sargam
பிப் 14, 2024 09:57

வாழ்த்துக்கள்.


Rajarajan
பிப் 14, 2024 09:02

அப்படி போடு. வாழ்த்துக்கள். திறமை, விடாமுயற்சி, சரியான இலக்கு, விழுந்தால் எழுவது, தவறை திருத்திக்கொள்வது, ஆகியவை தான் வெற்றியின் தாரக மந்திரம். அதைவிடுத்து, வெங்காயம் தான் படிப்பை கொடுத்தார்னு உருட்டறது, ஜாதி அடிப்படையில் திறமை வளர்க்காமல் இருப்பது, ஜாதியை வைத்து பொறுப்பு கேட்பது எல்லாம் அடிமுட்டாள் தானம்.


D.Ambujavalli
பிப் 14, 2024 06:46

இதே 'மாடல்' முதல்வரோ, அவர் இத்தனை வசதிகளுடன் இருந்தும் கல்வியில் எந்த உச்சத்தைத் தொட்டார்கள்? எனவே அந்த பெண்ணின் உழைப்பு, பெற்றோரின் ஊக்குவித்தலுமே காரணம். என்றதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்


Shankar
பிப் 13, 2024 22:59

பெரிய வசதி இல்லாத மலைக்கிராமம். இதை சொல்வதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா திராவிட மாடல் முதல்வர் அவர்களே. அப்படி வசதி செய்து கொடுக்கவேண்டியது யாருடைய கடமை? உங்களுடையது தானே?


theruvasagan
பிப் 13, 2024 22:13

இந்த மாதிரி வெற்றி பெற்றவர்கள் தங்கள் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் கடவுள் அருளாலும் தாங்கள் சாதித்தாக சொல்லுவார்களே தவிர இதுக்கெல்லாம் காரணம் ஈர வெங்காயம்தான் என்று ஒருகாலும் சொல்லமாட்டார்கள். அடுத்தவங்க ஸ்டிக்கரை திருடி நம்ம மேல ஒட்டிக்கறது மகா கேவலம்.


theruvasagan
பிப் 13, 2024 21:58

ஆயிரத்தில் ஒருத்தர்தான் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் சுயமுயற்சியாலும் கடின உழைப்பாலும் உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஆனால் அதை தங்கள் சாதனை என்று டஜன் கணக்கில் ஸ்டிக்கர் ஒட்டுறது அநியாயம். பெரும்பாலோர் அந்ந நிலையை எட்டினால் பெருமை கொள்ளலாம்.


Bhakt
பிப் 13, 2024 21:28

திராவிட மாடல் தலீவருக்கு தான் படிப்பு மண்டைல ஏறல


Sivaswamy Somasundaram
பிப் 13, 2024 20:05

இதிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2024 18:57

நீயி உழைச்சு முன்னுக்கு வந்தே ...... உங்க மேல கூட ஸ்டிக்கர் ஓட்டுறாங்களே தாயி .......


மேலும் செய்திகள்







புதிய வீடியோ