உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் -திருச்சி எஸ்.பி., மோதல் முற்றியது; இணைய கூலிப்படை என விமர்சனம்!

சீமான் -திருச்சி எஸ்.பி., மோதல் முற்றியது; இணைய கூலிப்படை என விமர்சனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: நாம் தமிழர் கட்சியினருடன் நீண்ட நாட்களாக மோதல் இருந்து வரும் நிலையில், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் எதிராக அவதுாறு பரப்பும் கட்சியினருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக திருச்சி எஸ்.பி., வருண்குமார் அறிவித்துள்ளார்.

கருத்துகள்

சமூக வலைதளத்தின் தாக்கத்தை அவ்வளவு எளிதாக அளவிட முடியாது. சிறிய விஷயம் பெரியதாகிவிடும், பெரிய விஷயம் பஞ்சாக பறந்துவிடும். எப்படி நடக்குது இந்த மேஜிக் என்பது மட்டும் தெரியாது. அரசியல் கட்சிகள், அதன் முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை பின்பற்றி அவரது ஆதரவாளர்கள் வெளியிடும் கருத்துகள் வெகு வேகமாக விமர்சிக்கப்படும்.

விலக முடிவு

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தம்மையும், தமது குடும்பத்தை பற்றியும் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டதாக திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சி மீதும், அதன் நிர்வாகிகள் மீது அவர் புகாரும் கூறி இருந்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும், வருண் குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர்.இந்நிலையில், சமூக வலைதளத்தில் இருந்து தானும் தமது மனைவி வந்திதா ஐ.பி.எஸ்., இருவரும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் வருண் குமார்.

அறிக்கை

அவர் வெளியிட்டு உள்ள நீண்ட அறிக்கையின் சுருக்கம் வருமாறு: நான் காவல்துறை பணியின் மீதுள்ள விருப்பப்பட்டு சேர்ந்தேன். சாமானிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன், மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பதில் முனைப்போடு செயலாற்றி வருகிறேன்.

சட்ட அடிப்படையில் பணி

ஒரு யுடியூபர் பதிவிட்ட சர்ச்சை அவதூறுகளால் கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக அவர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னை கடுமையாக சாடினார்.

மான நஷ்ட வழக்கு

அதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளத்தில் என்னைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் ஆபாசம் மற்றும் அவதூறுகளை குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியினர் பரப்பி வருகின்றனர். முகம் தெரியாத கோழைகளுக்கும் இணையக் கூலிப்படைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, தேவையோ எங்களுக்கு இல்லை.ஆனால், இப்படி அவதுாறு பரப்பும் போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்திருக்கும் விஷமிகளையும் நீதிமன்றத்தில் நிறுத்துவேன். அவதூறு கருத்துக்களை பரப்பிய கட்சி ஒருங்கிணைப்பாளர், 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்.இந்த கூட்டத்துக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டி உள்ளது.இவ்வாறு எஸ்.பி., வருண் குமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் பெயரோ, சீமான் பெயரோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், அவருக்கும், சீமான் கட்சியினருக்கும் தகராறு நீண்ட காலமாக இருப்பதை அனைவரும் அறிவர்.தமது பதிவில், அவதூறு பரப்பியதாக எக்ஸ் வலைதள பக்கத்தின் பல்வேறு பயனர்கள் முகவரிகளையும் அவர் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

A.uthayanakumaran.
ஆக 25, 2024 14:20

இவங்களே பரப்பிட்டு அவங்கமேல ஏன் பழி போட்டு இருக்கக்கூடாது?எல்லா பித்தலாட்டமும் மீடியாவுல நடக்குது?


K JAGANATHAN
ஆக 25, 2024 12:55

சீமான் திருந்தவே மாட்டார். தன்னை ஒரு பெரிய ஆளா நினைக்கிறார். வெறும் வாய்ச்சவடால் பேர்வழி. இவருக்கெல்லாம் ஒரு மரியாதை கூட கொடுக்கக்கூடாது. இவருக்கிட்ட எந்த பேட்டியும் எடுக்க கூடாது. இவரை ஒதுக்கி வைக்கவேண்டும்


MADHAVAN
ஆக 24, 2024 16:39

சீமானுக்கு பயந்து வேலையை விடவேண்டாம்,


Velan Iyengaar
ஆக 24, 2024 16:34

எழுதி வெச்சுக்கோங்க ... இந்த அதிகாரி போடும் வழக்கில் சீமான் அசிங்கமாக கோர்ட்டில் மன்னிப்பு கேட்பார்.அல்லது மானநஷ்ட தொகை தருவார் ....பொய்யும் புரட்டும் கேவலமான பேச்சு நடையும் கொண்ட சீமானுக்கு கெட்ட காலம் ....


ganapathy
ஆக 24, 2024 18:55

மிக மிக சரியான பதிவு


guru
ஆக 24, 2024 15:56

இந்த எஸ்பி வருண்குமார் சட்டை துறைமுருகனை சட்டப்படி கைது செய்தது சரி. ஆனால் அவருடைய செல்போனை பறித்து அதில் சீமானும் இவரும் தனியாக பேசிய ஆடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டது எந்த விதத்தில் நியாயம்? இங்கே இவர் செய்தது சரி என்பவர்கள் உங்களை கைது செய்து உங்கள் போனில் உள்ள ஆடியோ, புகைப்படங்களை பகிறந்தால் ஏற்பீர்களா?


அன்பு
ஆக 24, 2024 15:53

வருண் குமார் வெறும் அம்பு மட்டுமே. வில் யாரோ!!!!!!!


Sridhar
ஆக 24, 2024 14:50

அதுதான் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டாரே? அதுக்கப்புறமும் கேஸ் போடுவேன்னா கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?


Bala
ஆக 24, 2024 14:38

இவர் சிபார்சின் பெயரில் காவற்துறையில் உதவி ஆய்வாளராகச் சேர்த உபி எப்படி இருப்பார் ? பணியிடை நீக்கத்திலிருந்தவர் எப்படி இருப்பார் ?


Anand
ஆக 24, 2024 14:01

நாம் டுமிலர் சாக்கடைகளில் கூடாரம் போலிருக்கு.


guru
ஆக 24, 2024 15:58

கைது செய்தவன் போனில் உள்ள ஆடியோ வீடியோவை திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பிய இந்த காவலர் யோக்கியமா சங்கி சார்


Kasimani Baskaran
ஆக 24, 2024 13:58

பெரும்பாலும் ஐடி விங் கோஷ்டி உலகத்திலேயே தங்களுக்குத்தான் செல்வாக்கு அதிகம் என்று நினைத்துக்கொண்டு முகநூல் காட்டும் ஆதரவை வைத்துக்கொண்டு உருட்டோ உருட்டு என்று உருட்டுகிறார்கள். தனக்கென்று உடன் பிறப்புக்களை டிஜிட்டல் கிரீயேட்டர்ஸ் என்று அடையாளம் வைத்திருப்பார்கள் பாலோவர்களகா வைத்துக்கொண்டு நிமிடத்தில் பல்லாயிரம் பேர் பார்க்குமளவுக்கு பதிவிடுவார்கள். போலி ஐடி என்று புகாரளித்தால் முகநூல் நிறுவனத்துக்கு லாபமில்லாத கணக்குகள் நீக்கப்படும்.


புதிய வீடியோ