உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் முற்றுகை போராட்டம்

கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் முற்றுகை போராட்டம்

ஓசூர்:''கர்நாடகாவில் வரும், 22 முதல் காலவரையற்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும்,'' என, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலர் சண்முகப்பா கூறினார். கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே அவர் கூறியதாவது: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் லாரி, பஸ் போன்ற வாகனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் ஏ.எம்.எல்., நிறுவனம் சரியாக பழுது பார்ப்பதில்லை. சரியான அணுகுமுறையும் இல்லை. பல லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரு குழந்தைகள் செப்., 10ம் தேதி ரேணிகுண்டா வனப்பகுதி சாலையில் லாரி ஒன்று பழுதானது. அங்குள்ள ரேணிகுண்டா ஏ.எம்.எல்., நிறுவனத்திற்கு பழுது பார்க்க தகவல் தெரிவித்தும், மூன்று நாட்கள் கழித்து வந்து பார்த்து விட்டு, பழுது சரி செய்வதற்கான பொருட்கள் இல்லை எனக்கூறி, ஐந்தாவது நாள் திரும்ப வந்துள்ளனர். ஆறாவது நாள் உணவு, தண்ணீரின்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு, லாரி டிரைவரான கர்நாடகா மாநிலம், ஒசபேட்டா பகுதியை சேர்ந்த, 28 வயதான மெகபூப் என்பவர், ரேணிகுண்டா ஏ.எம்.எல்., நிறு வனத்திற்குள் உயிரிழந்தார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தும், ஏ.எம்.எல்., நிறுவனம் மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என கேட்டும் கொடுக்கவில்லை. அனுமதிக்க மாட்டோம் எனவே, கர்நாடகாவில் உள்ள, 14க்கும் மேற்பட்ட ஏ.எம்.எல்., நிறுவனங்கள் முன், வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அந்த நிறுவனத்திற்குள் பழுது பார்க்க வாகனங்களை அனுமதிக்க மாட்டோம். அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஏ.எம்.எல்., நிறுவனம் செயல்படுகிறது. ஆனால், அந்நிறுவனம் மீது அசோக் லேலண்ட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கர்நாடகா மாநிலத்தில் நடக்கும் போராட்டத்திற்கு, தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ