மேலும் செய்திகள்
கோவை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவு
5 hour(s) ago | 3
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
6 hour(s) ago | 8
''முழு நம்பிக்கையுடன் கூடிய உண்மையான பிரார்த்தனை கட்டாயம் பலன் அளிக்கும்,'' என,சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை வழங்கினார். புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் கோல்மார்க்கெட் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் நிகழ்த்திய அருளுரை: பக்தர்கள் பல நேரங்களில் தங்கள் பிரார்த்தனை பலனளிக்கவில்லை என்று உணர்கிறார்கள். கனமழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு ஆற்றைக் கடக்க முயற்சிப்பது விவேகமானதல்ல. வெள்ளம் வடியும் வரை காத்திருக்க வேண்டும். நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனை, வாழ்க்கையில் வரும் இடர்பாடுகளை எதிர்கொள்ளவும், நல்லகாலம் வரும்வரை காத்திருக்கவும் மனதை வடிவமைக்கிறது. எனவே, பிரார்த்தனை பலனளிப்பதில்லை என்று நினைக்காமல், மீண்டும் நல்ல காலத்துக்குள் நுழையும் வரை காத்திருப்போம் என்று நினைக்க வேண்டும். முழுமையான நம்பிக்கையுடன் கூடிய உண்மையான பிரார்த்தனை கட்டாயம் பலன் அளிக்கும். கடவுளைப் போற்றும் நாமங்களும், ஸ்தோத்திரங்களும் கடவுளுடனான தகவல் தொடர்புக்கு உறுதியான ஊடகமாக கருதப்படுகின்றன. பக்தியில் தோய்ந்த மனம், கடவுளின் நாமத்தை உச்சரிக்கும்போது, பிரார்த்தனைகள் இறைவனின் திருவடிகளைச் சென்றடையும். இவ்வாறு அருளுரை நிகழ்த்தினார். - - நமது நிருபர் -
5 hour(s) ago | 3
6 hour(s) ago | 8