உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: அதிகாரிகள் பதிலளிக்க அவகாசம்

துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: அதிகாரிகள் பதிலளிக்க அவகாசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. விசாரணையை ஜூன் 7க்கு தள்ளி வைத்துள்ளது.கடந்த 2018ல், துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கி சூடு நடந்தது. இதில், 13 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில் வழக்கை முடித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இவ்வழக்கில் சேர்த்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட போலீசார், கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகளை வழக்கில் இணைத்து, கூடுதல் மனுவை ெஹன்றி திபேன் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள, 17 அதிகாரிகளும் பதில் அளிக்க 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நோட்டீஸ் சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஜூன் 7க்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, ஜூன் 18க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 26, 2024 12:44

எதுக்கு இவ்வளவு வேகமா போகணும் மெல்ல மெல்ல


பேசும் தமிழன்
ஏப் 26, 2024 08:40

ஒன்றும் அவசரமில்லை.... 2050 ஆண்டுக்குள் பதில் கொடுத்தால் போதும்.... நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை போய் விட்டது.


D.Ambujavalli
ஏப் 26, 2024 06:34

அதிகாரிகள் ஆதிகாலம் முதலே பெரிய இடங்கள் வாய்ச்சொல்லாக சொல்வதை நிறைவேற்றக் கட்டளையிடப்படுகிறார்கள் இம்மாதிரி கோர்ட் கேஸ் என்று வரும்போது எழுத்து மூலம் உத்தரவில்லாததால் அரசியல்வாதிகள் தப்பித்துக்கொண்டு விடுவார்கள்


Kasimani Baskaran
ஏப் 26, 2024 06:10

கலவரத்தை தூண்டியவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு அப்பாவிகளை சுட்டுக்கொன்று ஒரு வித பீதியை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடலின் சிறப்பு இராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கே பொன்னாடை கிடைக்கும் பொழுது விரைவில் திட்டமிட்டு கலவரம் செய்தவர்களுக்கும் கூட விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் செத்தது என்னவோ கூலிக்கு கலவரம் செய்தவர்கள் என்பதை அறிக


sankaranarayanan
ஏப் 26, 2024 05:28

துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆறு வருடங்கள் சென்றும் இன்னும் முடியவில்லை இது இப்படியே சென்றால் இன்னும் பத்து ஆண்டுகள் சென்று அந்த நடந்த விபத்தில் ஆளான ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் பிறகு வழக்கு தள்ளுபடியாகும் இதுதான் நாட்டில் நடப்பு


R Kay
ஏப் 26, 2024 03:44

அரசுகளும், ஆணையிட்டவர்களும் தப்பி விடுவார்கள் கீழ்நிலை அதிகாரிகள்தான் பாவம் எதோ தாங்களே முடிவெடுத்து சுட்டதாக பலிகடா ஆக்கப்படுவார்கள் இனி தங்களை தற்காத்துக்கொள்ள உத்தரவுகளை எழுத்து மூலம் வாங்கிய பின்னரே செயலில் இறங்க வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி