உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.,வில் சிறார் அணி

த.வெ.க.,வில் சிறார் அணி

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தில், சிறார் அணி உருவாக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி, நிர்வாகிகளை நியமித்து வருகிறார். மாவட்ட செயலர்கள் நியமனம் நிறைவடைந்த நிலையில், புதிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறார் அணி, மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, மாணவர் அணி, தன்னார்வலர்கள் அணி உட்பட 28 அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இதுவரை எந்த கட்சியிலும், சிறார் அணி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை